வேளாண் வாயில் வேட்பக் கூறுதல்

பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பிற்கால வாசகர்களுக்கு எளிதாகவும் முழுமையாகவும் அறிமுகப்படுத்திய பெருமைஉரையாசிரியர்களையே சாரும் . கி.மு இரண்டாம்நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டு வரை ஏட்டுச் சுவடிகளிலேயே வாழ்ந்து வந்த இலக்கியங்களுக்கு மாணவர்களின்நினைவாற்றலில் இடத்தைப் பெற்றுத் தந்த உரையாசிரியர்களுள் நச்சினார்க்கினியர் மிக முக்கியமானவர். நச்சினார்க்கினியர் 14ஆம் நுற்றாண்டில் தோன்றியவர். அதிக எண்ணிக்கையில் நூல்களுக்கு உரை வரைந்தவர் என்ற பெருமைக்குரியவர். மதிநுட்பமும் கூர்த்த பார்வையும் உடையவர்.தமது பரந்துபட்ட இலக்கிய அறிவினால் மூலநூல்களுக்குப் புதுப்புதுக் கோணங்களில் உரை விளக்கம் கூறியவர். பிற்காலப் புலவர்களால் பெரிதும் போற்றப்பட்டவர் . இவரைப் பற்றி ,“தம் காலத்தை ஒட்டிய கருத்துக்களை மட்டுமல்லாமல் தாம் சார்ந்த சமய , சமூகக் ...

Read More

தெற்காசிய பொருளாதாரக் கூட்டமைப்பு

தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் (ASEAN -Association of Southeast Asian Nations) முன்னெடுப்பில் ‘பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டமைப்புக்கான’ (RCEP - Regional Comprehensive Economic Partnership) ஒப்பந்தம் நவம்பர் மாதம் 15 ஆம் நாள் உறுப்பு நாடுகளால் வெற்றிகரமாகக் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதில் 10தெற்காசிய நாடுகளும்- ப்ரூனைய், கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், வியட்நாம்- ஆகிய இந்நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துள்ள ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.இந்த RCEP ஒப்பந்தம் இதுவரை உலகம் கண்டிராத மீப்பெரும் பிராந்தியரீதியான வர்த்தக ஏற்பாடு. இந்த ஒப்பந்தத்திற்கானப் பேச்சு வார்த்தை ...

Read More

நீலப் புரட்சி

காடுகளிலும், மலைப் பகுதிகளிலும் தொன்று தொட்டு வாழும் மக்களே பழங்குடிகள் என்ற பொதுப் புரிதல் இங்கு இருக்கிறது. அது தவறு. தங்கள் வாழிடமும், தொழிலும், பண்பாடும், கலாச்சாரமும் மாறாமல் இன்றும் கடலோரங்களில் வாழும் மக்களும் பழங்குடிகளே. கடந்த காலத்தில், மத்திய அரசால் அமைக்கப்பட்டு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்ட மண்டல் கமிஷனும் இதையே உறுதி செய்தது. பழமையான தனித்துவப் பண்புகளோடு, பூகோள ரீதியாய் தனித்துவப்பட்டு, பிற சமவெளிச் சமூகங்களோடு தொடர்பு வைத்துக்கொள்வதில் தயக்கம் காட்டும் மக்களே பழங்குடிகள்.காலங்காலமாக கடலில் வேட்டைத் தொழிலும், பாசி விவசாயமும் செய்யும் மீனவர்கள், சுயமரியாதை மிக்கவர்கள். தொழிலில் அவர்களிடம் கூலி என்பதே இல்லை. பழங்குடியினரின்தனித்துவமான ...

Read More

தேன் தடவிய சொற்களோடு வந்திருக்கிறது புதிய கல்விக் கொள்கை

தேன் தடவிய சொற்களோடு வந்திருக்கிறது புதிய கல்விக் கொள்கை. கொஞ்சம் கவனம் பிசகிய நிலையில் வாசிப்பவர்களை சாய்த்துவிடக்கூடிய அளவில் வசீகரமான வார்த்தை வலையாக அதை தயாரித்து வீசியிருக்கிறார்கள்.கவனமாக வாசித்த தமிழகம் அதன் சூதினை உள்வாங்கி அதற்கு எதிர்வினையாற்றத் தொடங்கி இருக்கிறது. தமிழகம் இதற்கு எதிர்வினையாற்றும் என்றும் எதிர்பார்த்தே இருந்தது மத்திய அரசு. ஆனால் இங்கு கிளம்பியுள்ள கொதிநிலையின் உச்சநிலை அவர்களைக் கொஞ்சம் அசைக்கவே செய்திருக்கிறது.எல்லோரும் ஏற்கிறார்கள். ஏன் தமிழகம் மட்டும் இந்தக் கொள்கையை இப்படி முரட்டுத்தனமாக எதிர்க்கிறது என் று முனகத் தொடங்கி இருக்கிறார்கள்.இதற்கான காரணம் எளிதானது.“கல்வி சிறந்த தமிழ்நாடு” என்றான் பாரதி.“பசியோடு இருக்கிற ஒரு மாட்டினை அவிழ்த்து விட்டிருக்கிறீர்கள். ...

Read More

உழைப்பு எனும் மார்க்சின் மந்திரச் சொல்

“ஃபாயர்பாஹ் பற்றிய ஆய்வுரைகளில் (1845)” மார்க்சியக் கோட்பாட்டின் முதல் வரைவு மிகச் சுருக்கமாக வழங்கப்பட்டிருப்பதாக மார்க்சிய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆய்வு முடிவுகளைச் சுருக்கமான “முடிவுரை”யில் சில பக்கங்களில் எழுதித் தந்து விட்டு, ஆய்வின் முழுவடிவை இனிதான் எழுத வேண்டும் என்ற நிலையில் மார்க்ஸ் நின்று கொண்டிருக்கிறார். மார்க்சியம் அவரது ஆயுள் முழுவதும் நமக்காக விரிவாக எழுதப்படுகிறது. ஃபாயர்பாஹ் பற்றிய ஆய்வுரைகளின் முதல் ஆய்வுரையின் முதல் வாக்கியம் கீழ்க்கண்டவாறு அமைகிறது. “ஃபாயர்பாஹின் பொருள்முதல்வாதம் உள்ளிட்டு இதுவரை இருந்து வந்திருக்கும் எல்லாப் பொருள்முதல்வாதத்துக்கும் உரிய பிரதான குறைபாடு இதுதான்: பொருள் , எதார்த்தம், புலனுணர்வு என்பது புறப்பொருள் அல்லது சிந்தனை என்னும் வடிவத்தில் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது; ஆனால் மனிதப் புலனுணர்வுள்ள நடவடிக்கை என்றும் நடைமுறை என்றும் கொள்ளப்படவில்லை, அகநிலையாகக் கொள்ளப்படவில்லை.” (கா. மார்க்ஸ் பி. எங்கெல்ஸ் வி. இ. லெனின் இயக்கவியல் பொருள்முதல்வாதம், முன்னேற்றப் பதிப்பகம் ...

Read More

இடித்துரைப்பார் இல்லாத ஜனநாயகம்

முதலாளித்துவப் பொருளாதாரமும் அதன் இலாப வேட்டை அமைப்புமுறையும் தப்பிப் பிழைத்திருப்பதற்கான உயிரிவாயுவாக எதேச்சாதிகார அரசியல் இருக்கிறது. ஆளும் வர்க்கத்தின் முதலாளித்துவப் படை ஜனநாயகத்தையும், ஜனநாயக நெறிமுறைகளையும், ஜனநாயக நிறுவனங்களையும் புதிய தாராளவாத எதேச்சாதிகாரங்கள் மலரக்கூடிய தற்காலிகக் கல்லறைக்கு விரட்டிக் கொண்டிருக்கிறது. இனிமேலும் ஒரு நாட்டைப் பொருத்ததாக இது இல்லை. ஐரோப்பாவிலிருந்து, அமெரிக்க, ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் ஓசியானியா வரை எதேச்சாதிகாரம் எழுச்சிமுகமாக இருப்பதையும் அவை ஜனநாயகத்தின் மீது தாக்குதல் தொடுப்பதையும் காணமுடிகிறது. அரசாங்கங்கள் பெரும்பான்மை வாதத்தைப் பயன்படுத்தி, தாராளமயத்தை ஒழிக்கவும் ஜனநாயகமற்ற நடைமுறைகளைப் பின்பற்றவும் முயற்சிகள் செய்து வருகின்றன. ஜனநாயகப் போலிகள் இவ்வாறு வலதுசாரிக்கு மாறுவது வரலாற்றில் ஒன்றும் புதிதல்ல. மக்கள் மீதும் மூலவளங்கள் மீதும் தங்குதடையற்ற கட்டுப்பாட்டை மீளப் பெறுவதற்கு எதேச்சாதிகார மற்றும் ஜனநாயக விரோத சக்திகள் எப்போதும் ஜனநாயகத்தைக் கீழறுக்க முயற்சி செய்துவருகின்றன வலிமையான தலைமையும் நிலையான ...

Read More

பேசப்படாத சாதி நூல்கள்

சமீபத்தில் மநுநூல் பற்றிய விவாதம் பெரியஅளவில் பேசுபொருளானது. அந்நூலின் சிலபகுதிகள் பெண்களை இழிவாகச் சித்திரிக்கிறதுஎன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்திருமாவளவன் பேசிய செய்தியைத் தொடர்ந்துஅதற்கு எதிராக வலதுசாரி அமைப்புகள்போராட்டங்களை நடத்தின. நிகழ்வு அத்துடன்நிறைவடைந்து விட்டது. அப்படி இல்லாமல்பெண்களை இழிவாகச் சித்திரிக்கிறது என்பதைத்தாண்டி அந்நூல் ஜனநாயகத்திற்கு எவ்வளவுஆபத்தானது என்னும் நிலையில் ஆரோக்கியமானபரந்துபட்ட விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கவேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தவிர பிறகட்சிகளோ அமைப்புகளோ அதை விவாதப்பொருளாக மாற்றுவதற்கு போதியளவு முனைப்புக்காட்டவில்லை. முந்தைய காலங்களில் மநுநூல்பரந்த விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும்உள்ளாக்கப்பட்டிருந்தாலும் வலதுசாரி சிந்தனைகள்அதிகாரத்தின் துணையுடன் வேகமாகப் பரவிவரும்இன்றைய சூழலில் அந்நூல் குறித்த விவாதம்மேலதிகமாகத் தேவைப்படுகிறது. ஜனநாயகம்காக்கப்படவேண்டும் என்பதற்கானதொழிற்பாட்டின் ஒருபுள்ளியான மநுநூல் எதிர்ப்புஅல்லது விமர்சனம் ...

Read More

பாபர் மசூதி தீர்ப்பு-இருட்டறை நீதி.!

1992 திசம்பர் 15-31 இந்தியா டுடே இதழ், பாபர் மசூதிஇடிக்கப்படும் காட்சியைத் தாங்கி வந்தது. இந்தியாவிற்குள்ளும்,அதற்கு வெளியேயும் உள்ள சனநாயகத்தில் நம்பிக்கைக்கொண்டிந்தோர் அதிர்ச்சியில் உறைந்திருந்த நேரம் அது. கருப்புநிறப் பின்னணியில் தேசத்தின் தலைகுனிவு என்று அந்த இதழ்தனது அட்டையில் தலைப்பிட்டிருந்தது. பல வண்ணப்பக்கங்களில் அது பாபர் மசூதி இடிப்பைக் காட்சிப்படுத்தியிருந்தது. அதுவரையிலுமாக தேசம் காப்பாற்றி வந்தமதசார்பின்மைப் பொருளற்றுப்போனது.பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் கோவில்கட்டுவதற்காகச் சட்டத்தை மீறி பாசக, விசுவ இந்து பரிசத்,சிவசேனா போன்ற இந்து அமைப்புக்கள் திரண்டு வந்துகரசேவை என்ற பெயரில் பாபர் மசூதியை இடித்துத் தள்ளினர்.இதற்காக நடெங்கிலுமிருந்தும் இலட்சக்கணகாகானக்கரசேவகர்கள் திரட்டப்பட்டிருந்தனர். அணி, அணியாகத்திரட்டப்பட்ட அவர்கள் பல ...

Read More