இளவேனில் என்னும் மக்கள் கலைஞன்

சென்னை மக்களால் டி.யு.சி.எஸ். எனச் சுருக்கமாக அழைக்கப்படும் பெருமைமிகு கூட்டுறவு நிறுவனத்தில் 1975ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தேன். பழமையான அந்த டி.யு.சி.எஸ். தொழிலாளர் சங்கத்திற்கு நான் பணியில் சேர்ந்த மூன்றே நடந்த தேர்தலில் நான் வெற்றிபெற்றுநிர்வாகப்பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டேன். தோழர் சி. கெ. மாதவன் தலைவராகவும், திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு துணைத்தலைவராகவும், பூ .சி . பால சுப்பிரமணியன் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். தேனாம்பேட்டையிலிருந்த திருநாவுக்கரசின் ‘நம் நாடு’ அச்சகத்தின் ஒரு பகுதியில்தான் தொழிற்சங்கத்தின் அலுவலகம் செயல்பட்டுவந்தது. விடுமுறை நாட்களில் அரசியல் வகுப்புகள், தொழிற்சங்க வகுப்புகள், புத்தகங்கள் வாசித்துப் பகிர்வது எல்லாம் நடக்கும். அங்கு வழக்கமாகதிருநாவுக்கரசு அவர்களைச் சந்திக்கவரும் ...

Read More

என் இதழியல் ஆசான் இளவேனில்

ஓர் உரைநடைஎழுத்து கவிதையைப்போல நம்மைக் கட்டிப்போட வைக்க முடியுமா?முடிந்ததே. கவிதை என்ற பெயரில் பலரும் மோசமான உரைநடையைஎழுதிக்கொண்டிருந்தபோது இளவேனிலின் கார்க்கி இதழ் எழுத்துகள் தேர்ந்த கவிதைகளை விடவும் மேலாக நம்மைக் கிறுகிறுத்துப்போய் மயங்கித் திளைக்கவைத்ததே. இதை யாரும் மறுக்க முடியுமா? எழுபதுகளில் ‘கார்க்கி’ பத்திரிகையில் இளவேனில் எழுதிய கட்டுரைகளை மாந்திமாந்தி, மாணவர்களான நானும் என் நண்பர்களும் மயங்கிக்கிடந்தோமே,மைதாஸ் கதையில் வருவதுபோல, ’கார்க்கி’யைத் தீண்டியவர் அனைவருமே தங்களுக்கு முன்னால் கனவாய் விரிந்த பொன்னுலகில் மிதந்தனரே. அதையெல்லாம் மறக்க முடியுமா? அறுபதுகளிலும் எழுபதுகளிலும் நான் வடசென்னையிலுள்ள தங்கசாலைப் பகுதியில்வசித்துவந்தேன். என்னுடைய பள்ளி நண்பர்களான நடேசனும் சம்பத் குமாரும் என்னைப்போலமுற்போக்கு இலக்கியத்தில் பேரார்வம் கொண்டவர்களாக ...

Read More

தோழர் தொ. ப.

காட்சி -1 இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரியில் 1972 முதல் கற்பித்தல் பணி. 1965 -இன் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் மதுரை மாணவப் போராளியும், நண்பருமான புலவர் வீராசாமி என்ற மறவர்கோஇளையான்குடி உயர்நிலைப்பள்ளியில்தமிழாசிரியர்.தொ. ப. வும் வீராசாமியும் அறைநண்பர்கள். இரு ஆண்டுகளின் பின் தொ. ப. வுக்குத் திருமணம். பரமக்குடியில் தனியாக வீடு எடுத்து இல்லறம்.இளையான்குடி போய்ப்போய் வந்தார். ஆண்டு நினைவு இல்லை; தொ. ப. பரமக்குடியில் வீடெடுத்து தங்கியிருந்த காலம்; பணியின் பொருட்டு இளையான்குடி போய்த் திரும்பினார். பரமக்குடியில்மேல்மாடி வீடு. இரவு உணவுக்குப்பின் ஒருநாள் அவருடன் உரையாடல். பேசிக் கொண்டிருந்த வேளையில், புரட்சிகர மார்க்சிய லெனினியப் பாதையில் ...

Read More

நண்பரும் தோழருமான தொ. ப.

தொ. ப. அவர்களுடனான நட்பு ’அறியப்படாத தமிழக’த்துடன் தொடங்கியது. அவர் பெரியாரிஸ்ட் என்றுதான் நண்பர்கள்அறிமுகம் செய்து வைத்தார்கள் . அவரும் அப்படித்தான் சொன்னார். வீட்டில் பெரியாருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் சுவரில் இருந்தது. ஆனால் அவருடைய சின்னச் சின்னக் கட்டுரைகளை வாசிக்க வாசிக்க அவையெல்லாம்மார்க்சிய அணுகுமுறையுடன் எழுதப்பட்டிருப்பதைச் சட்டெனப் புரிந்து கொள்ள முடிந்தது. ( பெரியாருடைய அணுமுறையிலும்தான்மார்க்சியப்பார்வை இல்லையா என்ன?)அந்த நிமிடத்தில் துளிர்த்த நட்புணர்வும் தோழமையும் அவர் இறக்கும்நாள் வரை நீடித்தது. தேசிய இனப்பிரச்னையில் இலங்கைத்தமிழர் பிரச்னையில்சாதி-வர்க்க முன்னுரிமைகளில் என மூன்று புள்ளிகளில் வேறுபட்டு நின்றோம். அதற்காக என்னுடனான உறவை அவர் முறித்ததில்லை. முகம் சுளித்ததில்லை. அதைத்தாண்டிய எங்கள் ...

Read More