இயற்கை வளம் சூழ்ந்த கொடைக்கானல் அடிவாரத் திலுள்ள வாளாத்தூர் சொக்கதேவன்பட்டி என்னும் ஊர்தான் தோழர் தா. பாண்டியன் அவர்களின் முன்னோர் வாழ்ந்தஇடமாகும்.தற்போதைய தேனி மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள வெள்ளைமலைப்பட்டிஎன்னும் சிற்றூரில் நான்காவது மகனாக 18-05-1932 அன்று பாண்டியன் பிறந்தார்.அவரது தந்தையார் டேவிட், தாயார் ரேச்சல் நவமணி ஆகியோர் கிருத்துவ அமைப்பினர் நடத்திய பள்ளியில் ஆசிரியர்களாக அப்போது பணியாற்றி வந்தனர். காமக்காப்பட்டி கள்ளர் சீரமைப்புத் துறையினர் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்துவிட்டு,உசிலம்பட்டியில் இருந்த மதுரை மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்து பயின்றார்.எட்டாம் வகுப்புப் படிக்கும்போது, ஆசிரியராக இருக்கும் தந்தையிடம் எழுதி வாங்கிப் பேசுவார்என்ற எண்ணத்தில் பாண்டியனின் ஆசிரியர் வரைப் ...
Read Moreம னிதர்களின் வர லாற்றுக் கு முந்தைய கலாச்சாரம் அல்லது மனிதர்களின் முன்னேற்றம்என்பது, கல்லாலான கருவிகளை உருவாக்கியதும், அவற்றைப் பயன்படுத்தியதுமான செயல்களை அடிப்படையாகக் கொண்டது. அப்படிக் கல்லாலான கருவிகளைப் பயன்படுத்திய காலம், பொதுவாக ‘கற்காலம்’ (Stone Age) எனப்படுகிறது. 3.3 மில்லியன் (33 இலட்சம்) ஆண்டுகளுக்கு முன் துவங்கும் கற்காலம் மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. 1 பழையகற்காலம் (Paleo-lithic period): மனிதர்கள் முதன் முதலாகக் கல்லைக் கருவிகளாகப் பயன்படுத்திய காலம். பாறையிலிருந்துஉடைக்கப்பட்ட (chipped) ஒழுங்கற்ற கூர்மையான கற்களைப் பயன்படுத்திய காலகட்டம். 2 இடைக் கற்காலம் (Meso-lithic period): உடைக்கப்பட்ட, வடிவ-ஒழுங்கற்ற கற்கள் மற்றும் தேய்க்கப்பட்ட (polished) வடிவ-ஒழுங்கானகற்களாலான கருவிகளைப் பயன்படுத்திய காலம். 3 புதிய ...
Read More