கொரோனாவை ஒழிக்கும் கூட்டுச் சிகிச்சைமுறை!

உலகப்போர்கள் வந்து பல ஆண்டுகள் ஆயிற்று – அதன் விளைவுகள் எப்படி இருக்கும்என்று பார்க்கும் வாய்ப்பு இன்று! பக்தியின் ஆழத்தை இறைவன் சோதனை செய்த நிகழ்வுகள் புராண நூல்களில் மட்டுமேவாசித்திருக்கிறோம் – இன்று நேரில் காண்கிறோம்.தன் அணிகலன்க ள் ஒவ்வொன்றும் சிதைக்கப்படுவதன் வன்மத்தை இயற்கை ஒட்டுமொத்தமாக மனித குலம் மீது காட்டுகிறது!பிறப்பு முதல் இறப்பு வரை எதையோ தேடித்தேடி ஓடிக்கொண்டே இருந்த மனிதனுக்கு,சிந்திக்க வேண்டி ஒரு சிறிய இடைவெளி!“கடவுளை மற; மனிதனை நினை” என்னும் முழக்கம் இன்று சொல்லாமல் சொல்ல உணர்த்தப்படுகிறது.பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று படித்த நமக்கு, உயிர்பயம் வந்தால் எதுவெல்லாம் பறந்து போகும் ...

Read More

தமிழக சீர்த்திருத்தக் கிறித்தவத்தின் பண்பாடு ஏற்றல்!

உலகில் எந்தஒரு சமயமும் அதுதோன்றிய சமூகத்திலிருந்து நாடுகடந்தும் கண்டம்கடந்தும்பரவிச் செல்லும்போது, ஆங்காங்கேவேர்கொள்ளும் மனிதகுலம் ஏற்கெனவே பின்பற்றிவந்த சமூக,சமயம்சார்ந்த பண்பாட்டு முறைகளையும் தன்னில் கலந்தாக வேண்டியது தவிர்க்க முடியாததாகிப் போகிறது. இதனால் சிலபோது அச்சமயத்தின் கோட்பாடுகள்கூட தன்னில் திரிவுப்பெற்று மாறுபட்ட கருத்தாக்கத்தோடு பின்பற்றப்பட்டுப் போவதுமுண்டு. இத்தகைய மாற்றங்களுக்கு ஒரு சமயம் இடமளிக்கும் அளவினைப்பொருத்தே அம்மதம் தனது நெகிழ்ச்சித் தன்மையை வெளிக்காட்டுகிறது. இத்தன்மையால் அச்சமயம் அதன் தனித்தன்மையையும் குறைத்துக்கொள்ள வேண்டியதாகிவிடுகிறது. இவ்வகையில் தமிழகத்தில் கிறித்தவம் கி.பி முதலாம் நூற்றாண்டு முதலாகவே இயேசுவின்சீடரான புனிதத் தோமா மூலமாக விதைக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக கி.பி 14ஆம் நூற்றாண்டுமுதல் கத்தோலிக்க கிறித்தவமும் 18 ஆம் நூற்றாண்டு ...

Read More

கதைத் களத்திலிருந்து கிளைக்கும் எழுத்துக் கோபுரம்

சமீபத்தில் உலகப் புகழ்பெற்ற இயக்குநர் அகிரா குரசேவாவின் நேர்காணல்ஒன்றைத் தமிழ் மொழிபெயர்ப்பில் படித்தேன்; ஓரிடத்தில் ஒரு படத்தை இயக்குவதற்குமுன்னால் அந்தப் படத்தின் கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்த பிறகுதான் அதன்கதைமாந்தர்களுக்குப் பெயரிடுவது, நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுப்பது ஆகியவைகுறித்து முடிவு எடுப்பேன் என்கிறார்; இதைப் படித்த கணமே இதைத்தானேஇலக்கியப் படைப்பாக்கம் குறித்துப் பேசுகிற தொல்காப்பியரும் முதற்பொருள்,கருப்பொருள் என்று முன் வைக்கிறார் என்ற எண்ணம் எனக்குள் ஓடியதால், அந்தநேர்காணலில் குறிப்பிட்ட அந்தக் கூற்று என் மறதிக்குள் சென்று மறைந்து விடாமல்எனக்குள் நிலைநிறுத்தப்பட்டு விட்டது; இதை ஏன் இங்கேசொல்லிக்கொண்டிருக்கிறேன்என்றால் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவும் படைப்பாக்கத்தின் மேன்மையானஇந்த இரகசியத்தை அறிந்து செயல்படுபவராகத் தன் எழுத்துப் பயணத்தில்இயங்கியுள்ளார் என்பதைத் ...

Read More

இனப்படுகொலையா? போர்க்குற்றமா?

இலங்கைத் தீவில் நடந்தது இனப்படுகொலைதான் என்று தமிழகசட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடமாகாணசபையும் ஒருதீர்மானத்தை நிறைவேற்றியது. பெருந்தமிழ்பரப்பில் உள்ள ஆகப்பெரிய சட்டசபைதமிழக சட்டசபைதான். இதுதவிர கனடாவில் உள்ள பிரெம்டன் உள்ளூராட்சிசபையிலும் இவ்வாறான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவையாவும்தமிழ்ப்பரப்பில் தமிழ்த் தரப்புகளால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். இவைதவிர இந்திராகாந்தி 1983ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கைத்தீவில்நடப்பது இனப்படுகொலை என்று கூறினார். 83 கறுப்பு ஜூலைக்குப் பின் ஆகஸ்டுமாதம்16ஆம் திகதி இந்திய நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில்… “இலங்கைத்தீவில் என்ன நடக்கிறது என்றால் அது இனப்படுகொலை தவிர வேறு எதுவுமில்லை“ என்று இந்திராகாந்திகூறினார். இது தவிர, உலகில் உள்ள வேறுஎந்த ஒரு நாட்டின் உத்தியோகபூர்வ குறிப்பிலும் நடந்ததுஇனப்படுகொலை ...

Read More