இடித்துரைப்பார் இல்லாத ஜனநாயகம்

முதலாளித்துவப் பொருளாதாரமும் அதன் இலாப வேட்டை அமைப்புமுறையும் தப்பிப் பிழைத்திருப்பதற்கான உயிரிவாயுவாக எதேச்சாதிகார அரசியல் இருக்கிறது. ஆளும் வர்க்கத்தின் முதலாளித்துவப் படை ஜனநாயகத்தையும், ஜனநாயக நெறிமுறைகளையும், ஜனநாயக நிறுவனங்களையும் புதிய தாராளவாத எதேச்சாதிகாரங்கள் மலரக்கூடிய தற்காலிகக் கல்லறைக்கு விரட்டிக் கொண்டிருக்கிறது. இனிமேலும் ஒரு நாட்டைப் பொருத்ததாக இது இல்லை. ஐரோப்பாவிலிருந்து, அமெரிக்க, ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் ஓசியானியா வரை எதேச்சாதிகாரம் எழுச்சிமுகமாக இருப்பதையும் அவை ஜனநாயகத்தின் மீது தாக்குதல் தொடுப்பதையும் காணமுடிகிறது. அரசாங்கங்கள் பெரும்பான்மை வாதத்தைப் பயன்படுத்தி, தாராளமயத்தை ஒழிக்கவும் ஜனநாயகமற்ற நடைமுறைகளைப் பின்பற்றவும் முயற்சிகள் செய்து வருகின்றன. ஜனநாயகப் போலிகள் இவ்வாறு வலதுசாரிக்கு மாறுவது வரலாற்றில் ஒன்றும் புதிதல்ல. மக்கள் மீதும் மூலவளங்கள் மீதும் தங்குதடையற்ற கட்டுப்பாட்டை மீளப் பெறுவதற்கு எதேச்சாதிகார மற்றும் ஜனநாயக விரோத சக்திகள் எப்போதும் ஜனநாயகத்தைக் கீழறுக்க முயற்சி செய்துவருகின்றன வலிமையான தலைமையும் நிலையான ...

Read More

பாபர் மசூதி தீர்ப்பு-இருட்டறை நீதி.!

1992 திசம்பர் 15-31 இந்தியா டுடே இதழ், பாபர் மசூதிஇடிக்கப்படும் காட்சியைத் தாங்கி வந்தது. இந்தியாவிற்குள்ளும்,அதற்கு வெளியேயும் உள்ள சனநாயகத்தில் நம்பிக்கைக்கொண்டிந்தோர் அதிர்ச்சியில் உறைந்திருந்த நேரம் அது. கருப்புநிறப் பின்னணியில் தேசத்தின் தலைகுனிவு என்று அந்த இதழ்தனது அட்டையில் தலைப்பிட்டிருந்தது. பல வண்ணப்பக்கங்களில் அது பாபர் மசூதி இடிப்பைக் காட்சிப்படுத்தியிருந்தது. அதுவரையிலுமாக தேசம் காப்பாற்றி வந்தமதசார்பின்மைப் பொருளற்றுப்போனது.பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் கோவில்கட்டுவதற்காகச் சட்டத்தை மீறி பாசக, விசுவ இந்து பரிசத்,சிவசேனா போன்ற இந்து அமைப்புக்கள் திரண்டு வந்துகரசேவை என்ற பெயரில் பாபர் மசூதியை இடித்துத் தள்ளினர்.இதற்காக நடெங்கிலுமிருந்தும் இலட்சக்கணகாகானக்கரசேவகர்கள் திரட்டப்பட்டிருந்தனர். அணி, அணியாகத்திரட்டப்பட்ட அவர்கள் பல ...

Read More