இங்கிலாந்தில் சட்டமும் திட்டமும் (யூஜெனிக்ஸ் சித்தாந்தம்)

இங்கிலாந்தில் இருபத்திநாலு வாரங்களுக்கு மேல் கர்ப்பத்தில் இருக்கும் கருவை கருச்சிதைவு மூலம் அழிப்பது சட்டவிரோதமானது. விதிவிலக்காக, கருவில் இருக்கும் சிசு பிறந்த பின் அங்கவீனமான அல்லது “ substantial risk “ உள்ள குழந்தையாக வளரும் என்றுgenetic screening மற்றும் இன்னபிற மருத்துவ பரிசோதனைகள் மூலம் அறியும் பட்சத்திலோ அல்லதுஅந்தக்குழந்தை பிறந்த பின் இருதய அறுவைச் சிகிச்சைகள் போன்ற கணிசமான மருந்துவ தலையீடுகள் /உதவிகள் இல்லாமல் பிழைக்க மாட்டாது என்று தெரிந்தாலோ அதை 24 வாரங்கள் தாண்டிய பின் பிறக்கிற அந்தத்தருணம் வரையிலும் கருச்சிதைவு செய்து விடலாம் என்கிறது சட்டம். சில வேளை களில் இதைக் கருச்சிதைவு என்று சொல்வதை விட சிசுக்கொலை என்று கூறுவது பொருத்தமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. பொதுவாக நவீன ...

Read More

சித்த மருத்துவத்தை உலகறியச் செய்ய ஏழு செயல் திட்டம்

கலைஞர் அவர்களின் ஆட்சிகாலத்தில், பேராசிரியர் அன்பழகன் அவர்கள், தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறைகள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு வெளியிடப்படாமல்இருப்பது கண்டு, அதற்கான நிதியுதவிகளைக் கொடுத்து, பல மருத்துவச் சுவடிகளைப் புத்தகமாக வெளியே கொண்டு வந்தா ர்கள். அப்படித்தான், பழனியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த, முருகனின் சீடரான போகர் சித்தரின் பாரம்பரிய மருத்துவச் சுவடிகளில் பல முதன்முதலில் புத்தக வடிவில் வெளிவந்தன. அவை மறுபதிப்பு செய்யப்படாததால், அப்படியான புத்தகங்கள் இருந்ததே நம்மில் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. இன்னமும், பல சித்த மருத்துவச்சுவடிகள், கேட்பாரற்று மடங்களிலும், நூலகங்களிலும், மருத்துவச் சங்கங்களிலும், அருங்காட்சியகங்களிலும், பதிப்பாளர்களிடமும், மருத்துவர்களிடமும் பத்திரமாக பூட்டிவைக்கப்பட்டிருக்கிறது. கலைஞரின் அந்த தொண்டு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு, அரிய சுவடிகள், நூல் வடிவில் வெளிவர வேண்டும் என்பது ஒட்டுமொத்ததமிழர்களின் எதிர்பார்ப்பு ஆகும். தமிழ்நாடு ...

Read More

“எனக்காக என்ரை பிள்ளை காத்துக் கிடந்திருக்கிறான்”

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் உத்தேசமாக 1950 – 60 களில் ஆரம்பித்து 1983 களில்வீரியமடைந்து 2009 இல் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றிருந்தாலும் இன்னும் முடிவுறாதஉள்நாட்டுப் பிரச்சனையாக நீட்சி யுற்றுக் கொண்டிருப்பதை அறிவோம். முழு சுதந்திரத்தோடுவாழ அனுமதிக்கப் படவில்லை. புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களும் சொந்த நாடு வந்து குடியேறிவாழ்வதற்கான சூழல்களும் உருவாக்கப் படவில்லை. தமிழ் மக்கள் சிறுபான்மை இன மனஉணர்வோடும், அகதி, கைதிகளின் மன உணர்வோடும்தான் வாழ அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். நிதர்சனமாக சொல்வதானால் ஏராளமான நெருக்கடிகள் அவர்களை இன்னும் துரத்திக் கொண்டிருப்பதே உண்மை. மேலும், தமிழின அழிப்புக்கு இன சுத்திகரிப்புக்கானப் போர் என்ற ஒரு அரசியல் முகம் இருந்தாலும், அதனைத் தாண்டி தமிழின விடுதலை இயக்கங்களின் உள்முரண்கள் சார்ந்தும்,மதம், சாதி, அரசியல் சார்ந்தும் வேறுபட்ட பல முகங்களும் ...

Read More