இயற்கை வளம் சூழ்ந்த கொடைக்கானல் அடிவாரத் திலுள்ள வாளாத்தூர் சொக்கதேவன்பட்டி என்னும் ஊர்தான் தோழர் தா. பாண்டியன் அவர்களின் முன்னோர் வாழ்ந்தஇடமாகும்.தற்போதைய தேனி மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள வெள்ளைமலைப்பட்டிஎன்னும் சிற்றூரில் நான்காவது மகனாக 18-05-1932 அன்று பாண்டியன் பிறந்தார்.அவரது தந்தையார் டேவிட், தாயார் ரேச்சல் நவமணி ஆகியோர் கிருத்துவ அமைப்பினர் நடத்திய பள்ளியில் ஆசிரியர்களாக அப்போது பணியாற்றி வந்தனர். காமக்காப்பட்டி கள்ளர் சீரமைப்புத் துறையினர் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்துவிட்டு,உசிலம்பட்டியில் இருந்த மதுரை மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்து பயின்றார்.எட்டாம் வகுப்புப் படிக்கும்போது, ஆசிரியராக இருக்கும் தந்தையிடம் எழுதி வாங்கிப் பேசுவார்என்ற எண்ணத்தில் பாண்டியனின் ஆசிரியர் வரைப் ...
Read More