Welcome to family.
Get the 1 Year
for SUBSCRIPTION!
Welcome to Letterz
Get the Book
for FREE!

Author name: admin

உள்ளாட்சிகள் செய்ய தவறியவை

காந்தி “நீ எதை மற்றவர்களிடம் மாற வேண்டும் என்று எண்ணுகிறாயோ அந்த மாற்றத்தை நீ முதலில் உன்னிடமிருந்து தொடங்க வேண்டும்” என்று கூறுவார். இதை இங்கு கூறுவதற்கு ஒரு காரணம் நம் உள்ளாட்சிகள் மத்திய அரசு, மாநில அரசுகள் எங்களுக்குப் போதுமான நிதி தரவில்லை என்று கூறுகின்றன. ஆனால் உள்ளாட்சிகள் தாங்கள் உருவாக்க வேண்டிய நிதியை உருவாக்கினவா என்று வினவினால் இல்லை என்பதுதான் பதில். தாங்கள் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான கடமையைச் செய்யத் தவறியதால், அவைகள் […]

உள்ளாட்சிகள் செய்ய தவறியவை Read More »

இயந்திரங்களுடன் போட்டியிட தயாராகுங்கள்

புதிய கண்டுபிடிப்புகள் வர வர பழையவை வழக்கொழிந்துபோவது நடைமுறை யதார்த்தம். சில தொழில்களை இவை முற்றிலுமாக அழித்துவிடும். இதனால் அந்தத் தொழில் சார்ந்தவர்கள் வேலையிழக்கும் ஆபத்தும் நிகழும். அறிவியலின் அசுர வளர்ச்சிக்கு நாம் தரும் விலைதான் இவை. காணொளி வசதி (Video Conferencing) புழக்கத்திற்கு வந்தபிறகு யாருமே எதிர்பார்த்திராத இரண்டு பெரும் தொழில்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டன. ஒன்று தொழில் நிமித்தமாக விமானப் பயணம் மேற்கொள்ளும் அதிகாரிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. அடுத்தபடியாக ஹோட்டல் அறைகள் பல

இயந்திரங்களுடன் போட்டியிட தயாராகுங்கள் Read More »

இங்கிலாந்தில் சட்டமும் திட்டமும் (யூஜெனிக்ஸ் சித்தாந்தம்)

இங்கிலாந்தில் இருபத்திநாலு வாரங்களுக்கு மேல் கர்ப்பத்தில் இருக்கும் கருவை கருச்சிதைவு மூலம் அழிப்பது சட்டவிரோதமானது. விதிவிலக்காக, கருவில் இருக்கும் சிசு பிறந்த பின் அங்கவீனமான அல்லது “ substantial risk “ உள்ள குழந்தையாக வளரும் என்றுgenetic screening மற்றும் இன்னபிற மருத்துவ பரிசோதனைகள் மூலம் அறியும் பட்சத்திலோ அல்லதுஅந்தக்குழந்தை பிறந்த பின் இருதய அறுவைச் சிகிச்சைகள் போன்ற கணிசமான மருந்துவ தலையீடுகள் /உதவிகள் இல்லாமல் பிழைக்க மாட்டாது என்று தெரிந்தாலோ அதை 24 வாரங்கள் தாண்டிய

இங்கிலாந்தில் சட்டமும் திட்டமும் (யூஜெனிக்ஸ் சித்தாந்தம்) Read More »

சித்த மருத்துவத்தை உலகறியச் செய்ய ஏழு செயல் திட்டம்

கலைஞர் அவர்களின் ஆட்சிகாலத்தில், பேராசிரியர் அன்பழகன் அவர்கள், தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறைகள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு வெளியிடப்படாமல்இருப்பது கண்டு, அதற்கான நிதியுதவிகளைக் கொடுத்து, பல மருத்துவச் சுவடிகளைப் புத்தகமாக வெளியே கொண்டு வந்தா ர்கள். அப்படித்தான், பழனியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த, முருகனின் சீடரான போகர் சித்தரின் பாரம்பரிய மருத்துவச் சுவடிகளில் பல முதன்முதலில் புத்தக வடிவில் வெளிவந்தன. அவை மறுபதிப்பு செய்யப்படாததால், அப்படியான புத்தகங்கள் இருந்ததே நம்மில் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. இன்னமும், பல சித்த மருத்துவச்சுவடிகள்,

சித்த மருத்துவத்தை உலகறியச் செய்ய ஏழு செயல் திட்டம் Read More »

“எனக்காக என்ரை பிள்ளை காத்துக் கிடந்திருக்கிறான்”

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் உத்தேசமாக 1950 – 60 களில் ஆரம்பித்து 1983 களில்வீரியமடைந்து 2009 இல் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றிருந்தாலும் இன்னும் முடிவுறாதஉள்நாட்டுப் பிரச்சனையாக நீட்சி யுற்றுக் கொண்டிருப்பதை அறிவோம். முழு சுதந்திரத்தோடுவாழ அனுமதிக்கப் படவில்லை. புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களும் சொந்த நாடு வந்து குடியேறிவாழ்வதற்கான சூழல்களும் உருவாக்கப் படவில்லை. தமிழ் மக்கள் சிறுபான்மை இன மனஉணர்வோடும், அகதி, கைதிகளின் மன உணர்வோடும்தான் வாழ அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். நிதர்சனமாக சொல்வதானால் ஏராளமான நெருக்கடிகள் அவர்களை இன்னும் துரத்திக்

“எனக்காக என்ரை பிள்ளை காத்துக் கிடந்திருக்கிறான்” Read More »

நெடுவழி நினைவுகள்

பெரியார் இல்லாத மண்ணில், பெரியார் உயிருடனிருந்த காலத்தில் பெரியார் தன்னிடம்பேசியது போல் கால் நுழைக்கிறார் அ.ச. ஞானசம்பந்தம் என்ற தமிழறிஞர். கி.பார்த்திபராஜா சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர். தமிழ்த்துறை கருத்தரங்கத்திற்கு அ.ச.ஞானசம்பந்தனை அழைத்து வருவதும் அவரது சிறப்புரை முடிந்தபின் இல்லத்தில் போய்ச் சேர்ப்பதுமான பொறுப்பு கி.பார்த்திப ராஜாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. தமிழ்ப் புலமையே உருத்திரண்டது போல் திசையெல்லாம்வியந்து நோக்கும் ஒருவரை அழைத்துச் சென்று வரப் போகிறோம் என பார்த்திப ராஜாவுக்குபெருமிதம். சிறப்புரையில் ஞானசம்பந்தம் தனக்கும் தந்தை

நெடுவழி நினைவுகள் Read More »

2021 ஜூலை இதழ்/ ஒரு திருத்தம்

காக்கைச் சிறகினிலே ஜூலை 2021 இதழில் பக்கம் 32இல் உள்ள படம், தவறுதலாக இடம்பெற்றுவிட்டது. எனவே, கட்டுரைக்குத் தொடர்பில்லாத அந்தப்படம் நீக்கப்பட்டு, திருத்திய இதழாக இணையத்தில் காக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, இணையவழி இதழைப் பெற்றவர்கள், அதைப் பொருட்படுத்த வேண்டாம். தவறுதலுக்கு வருந்துகிறோம். -பொறுப்பாசிரியர், காக்கைச் சிறகினிலே,

2021 ஜூலை இதழ்/ ஒரு திருத்தம் Read More »

செல்வந்த நாடுகளின் பதுக்கலும் வறிய நாடுகளின் பரிதாபநிலையும்

கொரோனா பெருந்தொற்றுப்பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்கானதனிநபர்-சமூக முடக்கங்கள்தொடர்கின்ற அதேவேளை, பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை மக்களுக்குச் செலுத்தத்தொடங்கிவிட்டன. கடந்த 2020 டிசம்பரிலிருந்து தடுப்பூசி செலுத்துகின்றசெயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. உலகளாவிய மானிடப் பேரவலத்தை ஏற்படுத்திய இந்தத் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியிலும் அரசியல் செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது இதிலுள்ள கசப்பானயதார்த்தம். மனிதாபிமான மற்றும் மருத்துவ அடிப்படைகளுடன் நீதியான முறை யி ல்மேற்கொள்ள ப்படவ வேண்டிய – நாடுகளுக்கிடையிலான தடுப்பூசி பங்கீட்டில் –பொருளாதார பலம்மிக்க நாடுகள் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. முந்திக்கொண்ட செல்வந்த நாடுகள் அதாவது

செல்வந்த நாடுகளின் பதுக்கலும் வறிய நாடுகளின் பரிதாபநிலையும் Read More »

Scroll to Top

Subscribe To Our Newsletter

Subscribe to our email newsletter today to receive updates on the latest news, tutorials and special offers!