நெடுவழி நினைவுகள்
பெரியார் இல்லாத மண்ணில், பெரியார் உயிருடனிருந்த காலத்தில் பெரியார் தன்னிடம்பேசியது போல் கால் நுழைக்கிறார் அ.ச. ஞானசம்பந்தம் என்ற தமிழறிஞர். கி.பார்த்திபராஜா சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர். தமிழ்த்துறை கருத்தரங்கத்திற்கு அ.ச.ஞானசம்பந்தனை அழைத்து வருவதும் அவரது சிறப்புரை முடிந்தபின் இல்லத்தில் போய்ச் சேர்ப்பதுமான பொறுப்பு கி.பார்த்திப ராஜாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. தமிழ்ப் புலமையே உருத்திரண்டது போல் திசையெல்லாம்வியந்து நோக்கும் ஒருவரை அழைத்துச் சென்று வரப் போகிறோம் என பார்த்திப ராஜாவுக்குபெருமிதம். சிறப்புரையில் ஞானசம்பந்தம் தனக்கும் தந்தை […]