“எனக்காக என்ரை பிள்ளை காத்துக் கிடந்திருக்கிறான்”

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் உத்தேசமாக 1950 – 60 களில் ஆரம்பித்து 1983 களில்வீரியமடைந்து 2009 இல் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றிருந்தாலும் இன்னும் முடிவுறாதஉள்நாட்டுப் பிரச்சனையாக நீட்சி யுற்றுக் கொண்டிருப்பதை அறிவோம். முழு சுதந்திரத்தோடுவாழ அனுமதிக்கப் படவில்லை. புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களும் சொந்த நாடு வந்து குடியேறிவாழ்வதற்கான சூழல்களும் உருவாக்கப் படவில்லை. தமிழ் மக்கள் சிறுபான்மை இன மனஉணர்வோடும், அகதி, கைதிகளின் மன உணர்வோடும்தான் வாழ அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். நிதர்சனமாக சொல்வதானால் ஏராளமான நெருக்கடிகள் அவர்களை இன்னும் துரத்திக் கொண்டிருப்பதே உண்மை. மேலும், தமிழின அழிப்புக்கு இன சுத்திகரிப்புக்கானப் போர் என்ற ஒரு அரசியல் முகம் இருந்தாலும், அதனைத் தாண்டி தமிழின ...

Read More

நெடுவழி நினைவுகள்

பெரியார் இல்லாத மண்ணில், பெரியார் உயிருடனிருந்த காலத்தில் பெரியார் தன்னிடம்பேசியது போல் கால் நுழைக்கிறார் அ.ச. ஞானசம்பந்தம் என்ற தமிழறிஞர். கி.பார்த்திபராஜா சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர். தமிழ்த்துறை கருத்தரங்கத்திற்கு அ.ச.ஞானசம்பந்தனை அழைத்து வருவதும் அவரது சிறப்புரை முடிந்தபின் இல்லத்தில் போய்ச் சேர்ப்பதுமான பொறுப்பு கி.பார்த்திப ராஜாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. தமிழ்ப் புலமையே உருத்திரண்டது போல் திசையெல்லாம்வியந்து நோக்கும் ஒருவரை அழைத்துச் சென்று வரப் போகிறோம் என பார்த்திப ராஜாவுக்குபெருமிதம். சிறப்புரையில் ஞானசம்பந்தம் தனக்கும் தந்தை பெரியாருக்குமான தொடர்பைக் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார். “ நானும் என்னோட மனைவியும் பெரியாரைக் பார்க்கப் போனோம். சாஷ்டாங்கமாக அவர்பாதங்களில் விழுந்து தான் நமஸ்காரம் பண்ணுவோம்; ...

Read More

கதைத் களத்திலிருந்து கிளைக்கும் எழுத்துக் கோபுரம்

சமீபத்தில் உலகப் புகழ்பெற்ற இயக்குநர் அகிரா குரசேவாவின் நேர்காணல்ஒன்றைத் தமிழ் மொழிபெயர்ப்பில் படித்தேன்; ஓரிடத்தில் ஒரு படத்தை இயக்குவதற்குமுன்னால் அந்தப் படத்தின் கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்த பிறகுதான் அதன்கதைமாந்தர்களுக்குப் பெயரிடுவது, நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுப்பது ஆகியவைகுறித்து முடிவு எடுப்பேன் என்கிறார்; இதைப் படித்த கணமே இதைத்தானேஇலக்கியப் படைப்பாக்கம் குறித்துப் பேசுகிற தொல்காப்பியரும் முதற்பொருள்,கருப்பொருள் என்று முன் வைக்கிறார் என்ற எண்ணம் எனக்குள் ஓடியதால், அந்தநேர்காணலில் குறிப்பிட்ட அந்தக் கூற்று என் மறதிக்குள் சென்று மறைந்து விடாமல்எனக்குள் நிலைநிறுத்தப்பட்டு விட்டது; இதை ஏன் இங்கேசொல்லிக்கொண்டிருக்கிறேன்என்றால் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவும் படைப்பாக்கத்தின் மேன்மையானஇந்த இரகசியத்தை அறிந்து செயல்படுபவராகத் தன் எழுத்துப் பயணத்தில்இயங்கியுள்ளார் என்பதைத் ...

Read More