Welcome to family.
Get the 1 Year
for SUBSCRIPTION!
Welcome to Letterz
Get the Book
for FREE!

இங்கிலாந்தில் சட்டமும் திட்டமும் (யூஜெனிக்ஸ் சித்தாந்தம்)

இங்கிலாந்தில் இருபத்திநாலு வாரங்களுக்கு மேல் கர்ப்பத்தில் இருக்கும் கருவை கருச்சிதைவு மூலம் அழிப்பது சட்டவிரோதமானது. விதிவிலக்காக, கருவில் இருக்கும் சிசு பிறந்த பின் அங்கவீனமான அல்லது “ substantial risk “ உள்ள குழந்தையாக வளரும் என்று
genetic screening மற்றும் இன்னபிற மருத்துவ பரிசோதனைகள் மூலம் அறியும் பட்சத்திலோ அல்லது
அந்தக்குழந்தை பிறந்த பின் இருதய அறுவைச் சிகிச்சைகள் போன்ற கணிசமான மருந்துவ தலையீடுகள் /உதவிகள் இல்லாமல் பிழைக்க மாட்டாது என்று தெரிந்தாலோ அதை 24 வாரங்கள் தாண்டிய பின் பிறக்கிற அந்தத்தருணம் வரையிலும் கருச்சிதைவு செய்து விடலாம் என்கிறது சட்டம். சில வேளை களில் இதைக் கருச்சிதைவு என்று சொல்வதை விட சிசுக்கொலை என்று கூறுவது பொருத்தமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

பொதுவாக நவீன நவதாராளத்துவ பொருளாதார சூழலில் 35 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்கள் மிக அதிகம். அந்தப்பெண்களுக்கு கர்ப்பம் சம்பந்தமாக நிறைய சிக்கல்கள் வருவது தவிர்க்க முடியாத ஒன்று. 35 வயதிற்கு மேல் பிள்ளை பெறும் பெண்களின்
கர்ப்பத்தில் இருக்கும் சிசுவின் வளர்ச்சியை மற்றும் மரபணுக்குறைபாடுகளை கண்டறிய genetic screening, ரத்தப்பரிசோதனை மற்றும் CVS என்ற மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்துகிறார்கள்.

அந்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறியும் குறைகளை சம்பந்தப்பட்ட கர்ப்பிணிப்பெண்களோடும் கணவர்களோடும்/ இணை களோடும் பகிர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் “உங்கள் குழந்தை இன்ன பிற பிணிகள் சிக்கல்களோடு பிறக்கப்போகிறது, இந்த
குழந்தை பிறந்தால் உங்கள் குடும்ப அமைதி கெடும், உங்கள் உறவில் விரிசல்கள் ஏற்படும், நீங்கள் ஆஸ்பத்திரியும் வீடுமாக அலைவீர்கள், இதை நீங்கள் முளையிலேயே கிள்ளி விடுவது நல்லது. உங்கள் நன்மைக்காகத்தான் நாங்கள் இதை உங்களுக்கு சொல்கிறோம் , மீதி உங்கள் விருப்பம் .. “ etc. குழந்தை பிறக்கும் ஒரிரு நாட்களுக்கு முன்னரும் நீங்கள் சிசுவைக் கொல்லலாம் நாங்கள் அதற்கான வழி வகைகள் செய்வோம் என்று என்எச்எஸ் -ல் உள் கருக்கலைப்பு
ஆலோசனைப்பிரிவு தொடர்ந்து ஆலோசனை வழங்கும். இத்தகைய ஆலோசனை பல வேளைகளில் அதீதமான அழுத்தமாக மாறுகிறது என்று இந்த ஆலோசனைகளை
எதிர்த்து பிள்ளை பெற்றுக்கொண்ட பல ஆயிரம் பெண்கள் கூறுகிறார்கள் என்கின்றன புள்ளிவிபரங்கள்.

அந்த ஆலோசனையை மீறி பிள்ளை பெற்றுக்கொண்ட Emma Miller என்கிற பெண் தனது அனுபவத்தை பகிரும்போது ‘தான் கர்ப்பமாக இருந்த காலத்தில் கிட்டத்தட்ட பதினைந்து முறைகள் தனக்கு கருக்கலைப்பு பற்றி ஆலோசனை கிடைத்த தாகவும் பின்னர் தனது
முப்பத்தெட்டாவது வாரத்திலும் தனக்கு கருக்கலைப்பை ஊக்குவிக்க ஆலோசனை வழங்கினார்கள்’ என்றும் கூறியிருக்கிறார்.

இங்கிலாந்தில் இருக்கும் இந்த கருக்கலைப்பு ஆலோசனை மையத்தின் பெயர் கடந்த மாதம் வரையில் சுமார் நாற்பது ஆண்டுகளாக Marie Stopes International (MSI) என்றழைக்கப்பட்டது பின்னர் MSI Reproductive Choices ஆக பெயர் மாற்றப்பட்டது. இந்த அமைப்பு என் எச் எஸ் -ற்கூடாக செயற்படுகிறது. மேலும் Human fertilisation and Embryology Act 1990 என்னும் சட்டத்தின்
பிரகாரம் தான் இந்த விடயங்கள் அமுல்ப்படுத்தப்படுகின்றன. இனி இந்த சட்டத்திற்கான மூலம் எங்கிருந்து வந்தது என்று கவனிக்கலாம்.

1883 ல் Eugenics அல்லது “ well – born” என்ற விடயத்தை முதன் முதலில் பேசியவர் 1883 இல்
பிரான்சிஸ் கால்டன் (Francis Galton) என்பவர். அவர் உயிரியல் தந்தையான சார்ள்ஸ் டார்வினின்
உறவினருமாவார். இவர் உயிரியல், உளவியல் மற்றும் பல துறைகளில் கால் பதித்தவர். குறைகள் ஏதும் இல்லாத மனிதர்களை மட்டும் இனப்பெருக்கம் செய்ய அனுமதித்துவிட்டால் ஆரோக்கியமான சமூகத்தை கட்டி எழுப்பலாம் என்பது அவரின் Eugenics சித்தாந்தம். கிரேக்க
மொழியில் Eugenics என்பதை ‘சிறந்த’ அல்லது ஒரியினல் என்கிறார்கள், அதாவது சிறப்பான பிறப்பை மட்டும் அனுமதிப்பது தான் Eugenics -ன் கொள்கை. Francis Galton இதைப்பற்றி எழுதிய புத்தகத்தின் பெயர் Hereditary Genius (1869).

இந்த விடயம் பின்னர் அமெரிக்காவில் Eugenics movement என்று ஓர் இயக்கமாக உருவெடுத்தது. 1920- 30 களில் அமெரிக்காவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் sterilisation சட்டங்கள் வகுக்கப்பட்டு கிட்டத்தட்ட 64 ஆயிரம் பேர்கள் வரையில் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாதபடி sterilisation என்ற விடயத்திற்கு ஆளாக்கப்பட்டனர் என்பது சோக வரலாறு.

அதனைத் தொடர்ந்து அமெரிக்க Eugenics இயக்கத்துடன் நட்புறவை ஏற்படுத்திக்கொண்ட
ஹிட்லரும் Eugenics -க்கை சட்டமாக்கி யூத இன அழிப்பை உக்கிரப்படுத்தினார் என்பதும் ஒரு தூய
இனத்தை உருவாக்கும் வேட்கையில் பல்வேறு வகைப்பட்ட மனித அவலங்களை அரங்கேற்றினார்
என்பதும் யாவரும் அறிந்த ஒன்று. ஹிட்லருடன் நட்புறவில் இருந்து கொண்டு Eugenics பற்றி நிறைய
விடயங்களை ஹிட்லரோ டு மேரி ஸ்டாப்ஸ் (Marie Stopes) என்கிற பெண் பகிர்ந்து கொண்டதற்கு ஆதாரமாக இருவருக்குமிடையில் நடந்த கடிதப்பரிமாற்றங்கள் ஆதாரப்படுத்துகின்றன.

ஆகவே இந்த கருக்கலைப்பு ஆலோசனை மையத்தை Marie Stopes என்ற அந்த பெயரில் இருந்து பிரித்தெடுக்கிற நோக்கத்திலேயே மேற்குறிப்பிடப்பட்ட பெயர் மாற்றம் நடந்தேறியது என்று நம்பப்படுகிறது. மேரி ஸ்டாப்ஸ் இன்டர்நேஷனல் (Marie Stopes International) என்ற இந்த அமைப்பு கிட்டத்தட்ட 40 வருடங்களாக உலகில் உள்ள 30 நாடுகளுக்கு மேற்பட்ட நாடுகளில் கருச்சிதைவு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய விடயங்களை போதித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

பெண் குழந்தை கருக்கலைப்பு நடக்கும் நாடுகளில் இந்தக் கருக்கலைப்புக்களை ஊக்குவிக்கத் துணைபோகும் கருவியாக கர்ப்ப கால விஞ்ஞானப் பரிசோதனைகள் இருக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பெண்ணியப் பார்வையில் ‘ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்வதோ அல்லது அதைக் கருவிலேயே கலைத்து விடுவதோ கர்ப்பமாக இருக்கும் அந்தப்பெண்ணின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்த ஒன்று’ என்பதாகவே பல முற்போக்கான பகுத்தறிவு உள்ள மனிதர்களால் புரிந்து கொள்ளக்கூடியது.

ஆனால் பெண்ணியப்போர்வையில் ‘ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத’ கதையாக இந்த எம் எஸ் ஐ இனப்பெருக்க தேர்வுகள் (MSI Reproductive Choices) 35 வயதிற்கு மேல் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதற்கு தேவைக்கதிகமாக அழுத்தம் கொடுப்பது குடும்பங்களின் நிம்மதியை சீர்குலைக்க வழிவகுக்கிறது.

பொதுப்புத்தியில் கருக்கலைப்பை நிறுத்துவது என்பது பெண் விடுதலைக்கு எதிரான ஒன்று என்பதும் அதைப் பிற்போக்குவாதிகள் செய்ய விட மாட்டார்கள் என்பதால் நாங்கள் உங்கள் பக்கம் நிற்கிறோம் என்பதுமே MSI ன் அறிவுறுத்தல்.

ஆனால் அவர்கள் தலையீட்டின் உள்நோக்கம் Eugenics ஐ அமுலாக்கிக் கொண்டிருப்பதும் குணப்படுத்தக்கூடிய உடல் உபாதைகளோடு பிறக்கும் குழந்தைகளால் ஏற்படும் மருத்துவச் செலவைக் குறைப்பதுமேயாகும். இந்த விடயத்தைப்பற்றி என்னை எழுத வைத்த சம்பவங்களையும் குறிப்பிட வேண்டும். என்னுடைய தோழி ஒருவர் குழந்தை பெற்றெடுக்கப் போகும் கடைசி வாரத்தில் அதை கலைத்து விடும்படி அறிவுறுத்தப்பட்டு அதைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார். அந்தக் குழந்தை பிறந்தால் அதற்கு இருதய அறுவைச் சிகிச்சை
செய்ய வேண்டி வரும் என்றார்களாம், நீங்கள் பின்னர் வீடும் ஆஸ்பத்திரியுமாக அலைய வேண்டி வரும் என்றார்களாம், கணவன் மனைவி உறவில் இந்தக் குழந்தையால் விரிசல் ஏற்படும் என்றார்களாம், மேலும் இறக்கப்பண்ணி பெற்றெடுத்த குழந்தையை கண்ணில்
காட்டவும் இல்லை என்பதும் அவருக்கு கூடுதல் ஏக்கத்தை சோகத்தை மற்றும் மனவுளைச்சலையும் ஏற்படுத்தியது.

மற்றோர் 35 வயதைத் தாண்டிய தோழி கருவுற்று இரண்டு மாத்திற்கு உள்ளாகவே genetic screening ரெஸ்ட் செய்கிறோம் என்று ஏதோ தவறாக பண்ணி கருவை கலைத்தது ஆஸ்பத்திரி. இரண்டு பெண்களும் அடுத்த குழந்தை பெற்றுகொள்ளும் வரையிலும் பாரிய உளவியல்
தாக்கங்களுக்கு ஆளானார்கள்.

22/12/2020 பிரசுரமாகிய Sunday Times என்ற பத்திரிகையில் டொமினிக் லாசன் (Domic Lawson)
என்கிற பத்தி எழுத்தாளர் (columnist) இந்த விடயம் பற்றி “சிரமமான உண்மை: நாங்கள் யூஜெனிக்ஸ் பயிற்சி செய்கிறோம்“ (The inconvenient truth : we practice eugenics) என்ற தலைப்பில் எழுதி இருந்தார். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய மகள் அவர் மனைவியின் கர்ப்பத் தில் இரு ந்த காலத்தில் மருத்துவப்பரிசோதனைகள் மூலம் தன் மகளுக்கு டவுன் நோய்க்குறி (Down syndrome) இருப்பதாக கண்டறிந்து அந்தக் கருவை கலைக்கும் படி வற்புறுத்தினார்கள்
என்றும் அதற்கு இணங்காமல் தாங்கள் அந்தக் குழந்தையைப் பெற்று எடுத்ததாகவும் அந்தக் குழந்தை இப்பொழுது 25 வயது இளம் பெண்ணாக சுதந்திரமான மகிழ்ச்சியான ஒரு வாழ்வை வாழ்வதாகவும் கூறுகிறார், இந்த விடயம் பற்றி மேலும் அவர் கூறுகையில் American Journal of Medical Genetics என்ற அமைப்பால் 2011 ல் வெளியிடப்பட்ட பத்திரிகையில் அவர்கள் 3000 டவுன்
நோய்க்குறி (Down syndrome) உள்ள 12 வயதிற்கு மேற்பட்ட நபர்களிடம் கருத்து கணிப்பு செய்ததில் டவுன் நோய்க்குறி (Down syndrome) உள்ள 99 வீதமான நபர்கள் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் மற்றும் 97 வீதமானோர் அவர்களின் புறத்தோற்றம் பற்றி மிகவும்
திருப்தியாக உள்ளதாகவும் அறிந்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறது என்கிறார்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் இதை வாசிக்கும் நபர்கள் மத்தியில் இந்த நாட்டில் கருக்கலைப்பு பற்றி சட்டமும் அதைச் சுற்றி இருக்கும் புறவயமான தலையீடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் மட்டுமே.

ஒரு குழந்தையை பெற்றெடுப்பதோ அதை கருக்கலைப்பு செய்வதோ ஒரு பெண்ணின் தனிப்பட்ட
சுதந்திரமான தேர்வின் அடிப்படையில் இருக்க வேண்டுமேயொழிய அதில் யா ர் தலையீடும்
அழுத்தங்களும் இருக்கக்கூடாது, அது குடும்பமாக இருந்தாலும் சரி ஒரு அரசாக இருந்தாலும் சரி,
பெண்ணியவாதிகள் சார்ந்த நிறுவனமாக இருந்தாலும் சரி. இருப்பினும் எந்த முடிவு எடுக்கும் போதும் சம்பந்தப்பட்ட விடயம் பற்றி அனைத்தையும் அறிந்து தெளிந்த பின் எடுப்பது முக்கியம்.

Eugenics என்ற விடயம் எல்லா நாட்டு சட்ட திட்டங்களிலும் ஏதோ ஒரு வடிவத்தில் அல்லது பல
வடிவங்களில் இருக்கும் என்றே நம்புகிறேன் . இங்கிலாந்தைப் பொறுத்தவரை Human fertilisation and
Embryology Act 1990 -ற்கூடாக செயற்படுவதோடு மட்டுமன்றி வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள் அதிகம் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளாமல் இருக்க Universal Credit மூலம் இரண்டு குழந்தைகளை வளர்ப்பதற்கு மட்டுமானசெலவை அரசு பெற்றோர்களுக்கு வழங்குவதை Welfare Reform Act 2012 மூலம் அமுல்ப்படுத்தி மறைமுகமாக அவர்கள் சனத்தொகைப் பெருக்கத்தை
குறைக்கும் திட்டமாக வைத்திருப்பதையும் அவதானிக்கலாம்.

Facebook
Pinterest
LinkedIn
Twitter
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top

Subscribe To Our Newsletter

Subscribe to our email newsletter today to receive updates on the latest news, tutorials and special offers!