Welcome to family.
Get the 1 Year
for SUBSCRIPTION!
Welcome to Letterz
Get the Book
for FREE!

January 19, 2021

வேளாண் வாயில் வேட்பக் கூறுதல்

பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பிற்கால வாசகர்களுக்கு எளிதாகவும் முழுமையாகவும் அறிமுகப்படுத்திய பெருமைஉரையாசிரியர்களையே சாரும் . கி.மு இரண்டாம்நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டு வரை ஏட்டுச் சுவடிகளிலேயே வாழ்ந்து வந்த இலக்கியங்களுக்கு மாணவர்களின்நினைவாற்றலில் இடத்தைப் பெற்றுத் தந்த உரையாசிரியர்களுள் நச்சினார்க்கினியர் மிக முக்கியமானவர். நச்சினார்க்கினியர் 14ஆம் நுற்றாண்டில் தோன்றியவர். அதிக எண்ணிக்கையில் நூல்களுக்கு உரை வரைந்தவர் என்ற பெருமைக்குரியவர். மதிநுட்பமும் கூர்த்த பார்வையும் உடையவர்.தமது பரந்துபட்ட இலக்கிய அறிவினால் மூலநூல்களுக்குப் புதுப்புதுக் கோணங்களில் உரை விளக்கம் கூறியவர். பிற்காலப் […]

வேளாண் வாயில் வேட்பக் கூறுதல் Read More »

தெற்காசிய பொருளாதாரக் கூட்டமைப்பு

தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் (ASEAN -Association of Southeast Asian Nations) முன்னெடுப்பில் ‘பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டமைப்புக்கான’ (RCEP – Regional Comprehensive Economic Partnership) ஒப்பந்தம் நவம்பர் மாதம் 15 ஆம் நாள் உறுப்பு நாடுகளால் வெற்றிகரமாகக் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதில் 10தெற்காசிய நாடுகளும்- ப்ரூனைய், கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், வியட்நாம்- ஆகிய இந்நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துள்ள ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து ஆகிய

தெற்காசிய பொருளாதாரக் கூட்டமைப்பு Read More »

நீலப் புரட்சி

காடுகளிலும், மலைப் பகுதிகளிலும் தொன்று தொட்டு வாழும் மக்களே பழங்குடிகள் என்ற பொதுப் புரிதல் இங்கு இருக்கிறது. அது தவறு. தங்கள் வாழிடமும், தொழிலும், பண்பாடும், கலாச்சாரமும் மாறாமல் இன்றும் கடலோரங்களில் வாழும் மக்களும் பழங்குடிகளே. கடந்த காலத்தில், மத்திய அரசால் அமைக்கப்பட்டு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்ட மண்டல் கமிஷனும் இதையே உறுதி செய்தது. பழமையான தனித்துவப் பண்புகளோடு, பூகோள ரீதியாய் தனித்துவப்பட்டு, பிற சமவெளிச் சமூகங்களோடு தொடர்பு வைத்துக்கொள்வதில் தயக்கம் காட்டும் மக்களே பழங்குடிகள்.காலங்காலமாக

நீலப் புரட்சி Read More »

தேன் தடவிய சொற்களோடு வந்திருக்கிறது புதிய கல்விக் கொள்கை

தேன் தடவிய சொற்களோடு வந்திருக்கிறது புதிய கல்விக் கொள்கை. கொஞ்சம் கவனம் பிசகிய நிலையில் வாசிப்பவர்களை சாய்த்துவிடக்கூடிய அளவில் வசீகரமான வார்த்தை வலையாக அதை தயாரித்து வீசியிருக்கிறார்கள்.கவனமாக வாசித்த தமிழகம் அதன் சூதினை உள்வாங்கி அதற்கு எதிர்வினையாற்றத் தொடங்கி இருக்கிறது. தமிழகம் இதற்கு எதிர்வினையாற்றும் என்றும் எதிர்பார்த்தே இருந்தது மத்திய அரசு. ஆனால் இங்கு கிளம்பியுள்ள கொதிநிலையின் உச்சநிலை அவர்களைக் கொஞ்சம் அசைக்கவே செய்திருக்கிறது.எல்லோரும் ஏற்கிறார்கள். ஏன் தமிழகம் மட்டும் இந்தக் கொள்கையை இப்படி முரட்டுத்தனமாக எதிர்க்கிறது

தேன் தடவிய சொற்களோடு வந்திருக்கிறது புதிய கல்விக் கொள்கை Read More »

உழைப்பு எனும் மார்க்சின் மந்திரச் சொல்

“ஃபாயர்பாஹ் பற்றிய ஆய்வுரைகளில் (1845)” மார்க்சியக் கோட்பாட்டின் முதல் வரைவு மிகச் சுருக்கமாக வழங்கப்பட்டிருப்பதாக மார்க்சிய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆய்வு முடிவுகளைச் சுருக்கமான “முடிவுரை”யில் சில பக்கங்களில் எழுதித் தந்து விட்டு, ஆய்வின் முழுவடிவை இனிதான் எழுத வேண்டும் என்ற நிலையில் மார்க்ஸ் நின்று கொண்டிருக்கிறார். மார்க்சியம் அவரது ஆயுள் முழுவதும் நமக்காக விரிவாக எழுதப்படுகிறது. ஃபாயர்பாஹ் பற்றிய ஆய்வுரைகளின் முதல் ஆய்வுரையின் முதல் வாக்கியம் கீழ்க்கண்டவாறு அமைகிறது. “ஃபாயர்பாஹின் பொருள்முதல்வாதம் உள்ளிட்டு இதுவரை இருந்து வந்திருக்கும்

உழைப்பு எனும் மார்க்சின் மந்திரச் சொல் Read More »

Scroll to Top

Subscribe To Our Newsletter

Subscribe to our email newsletter today to receive updates on the latest news, tutorials and special offers!