Welcome to family.
Get the 1 Year
for SUBSCRIPTION!
Welcome to Letterz
Get the Book
for FREE!

73,000 ஆண்டுகள் பழமையான ஹேஷ்டேக் (#, hashtag) குறியீடு

ம னிதர்களின் வர லாற்றுக் கு முந்தைய கலாச்சாரம் அல்லது மனிதர்களின் முன்னேற்றம்
என்பது, கல்லாலான கருவிகளை உருவாக்கியதும், அவற்றைப் பயன்படுத்தியதுமான செயல்களை அடிப்படையாகக் கொண்டது. அப்படிக் கல்லாலான கருவிகளைப் பயன்படுத்திய காலம், பொதுவாக ‘கற்காலம்’ (Stone Age) எனப்படுகிறது. 3.3 மில்லியன் (33 இலட்சம்) ஆண்டுகளுக்கு முன் துவங்கும் கற்காலம் மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.

1 பழையகற்காலம் (Paleo-lithic period):

மனிதர்கள் முதன் முதலாகக் கல்லைக் கருவிகளாகப் பயன்படுத்திய காலம். பாறையிலிருந்து
உடைக்கப்பட்ட (chipped) ஒழுங்கற்ற கூர்மையான கற்களைப் பயன்படுத்திய காலகட்டம்.

2 இடைக் கற்காலம் (Meso-lithic period):

உடைக்கப்பட்ட, வடிவ-ஒழுங்கற்ற கற்கள் மற்றும் தேய்க்கப்பட்ட (polished) வடிவ-ஒழுங்கான
கற்களாலான கருவிகளைப் பயன்படுத்திய காலம்.

3 புதிய கற்காலம் (Neo-lithic period)

கற்களை நன்றாகத் தேய்த்தும், அரைத்தும் (grind), வடிவ-ஒழுங்குள்ள கருவிகளையும் ,
நுண்-கருவிகளையும் உருவாக்கிய காலம். அதோடு, நாடோடி வாழ்க்கை யிலிருந்து விடுபட்டு ,
வசிப்பிடங்களை உருவாக்கிக்கொண்டு வாழ ஆரம்பித்த காலம். நாய், ஆடு, மாடு, குதிரை
போன்றவற்றை, வீட்டுவிலங்குகளாக மாற்றியும், பயிர்த்தொழில் செய்தும், மண்பாண்டங்கள்
செய்தும், துணிகளை நெய்தும் வாழ ஆரம்பித்த காலமே, புதிய கற்காலம்.

வரலாறு தொடங்கும் காலம்:

உணவுதேடி அலைந்த மனிதர்கள், ஓரிடத்தில் தங்கி, உணவு உற்பத்தி செய்ய ஆரம்பித்தபோது,
மனிதர்களின் கலாச்சாரம் தொடங்குவதாகக் கூறப்படுகிறது. மனிதர்கள் வரலாற்றை, எழுத்தில்
பதிவு செய்ய ஆரம்பித்தபோது, மனிதர்களின் வரலாறு தொடங்கியதாகவும் சொல்கின்றனர்.
இப்படி, மனிதர்களின் கலாச்சார வரலாறானது, உலகில் பல்வேறு இடங்களில், பல்வேறு காலங்களில் தொடங்கியிருக்கிறது. பொதுவாக, 1 0 , 0 0 0 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டம் அனைத்தும், வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் ’(pre-historic era) எனலாம். அப்போது வாழ்ந்த மனிதர்களை, வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் என்றும் அழைக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் சொல்கின்றனர்.

குகை ஓவியங்கள்: (Cave Arts)

விலங்குகள், பறவைகளை வேட்டையாடியும், மீன்பிடித்தும், பழங்கள், கொட்டைகளைசேகரித்தும்,
பலவிதங்களில் உணவுதேடி நாடோடிகளாக அலைந்து திரிந்து பழங்கற்காலத்தில், மனிதர்கள்
கு கைக ளில் தங் கியிருக்கிறார்கள் . அந்த காலகட்டத்தில், அவர்கள் பயன்படுத்திவிட்டுச்
சென்ற பொருட்களில் இருந்துதான் அவர்களின் காலம் மற்றும் வாழ்வு முறைகளை, அகழாய்வாளர்கள் அறிந்து சொல்கிறார்கள்.

அப்படிக் குகைகளில் தங்கிய காலத்தில் , குகைகளின் சுவர்களில் அவர்கள் வரைந்திருக்கும்
வரைகோடுகளும் (drawings), தீட்டப்பட்ட வண்ண ஓவியங்களும் (paintings), பிரேசில், அர்ஜெண்டினா,
பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்பெயின், இந்தியா, இந்தோனீஷியா போன்ற பலநாடுகளின் குகைகளில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மிகவும் பழமையான கற்கால வரைகலை (Oldest Stone-age Art) :

100,000 மற்றும் 72,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், வரலாற்றுக்கு முந்தைய மனிதர்களான ‘ஹோமோசேப்பியன்ஸ்’ (Homo-Sapiens) தென்-ஆப்பிரிக்காவின் லாம்போஸ் குகையில் (BlombosCave) வாழ்ந்திருக்கிறார்கள். அக்குகையில், பல்வேறு கட்டங்களாக நிகழ்த்தப்பெற்ற அகழாய்வுகள், மிகவும் செறிவான கலைவடிவங்கள் அங்கு காணப்பட்டதாகப் பதிவு செய்திருக்கின்றன.
அக்குகையில் கண்டெடுக்கப்பட்ட, பெரியபெரிய கடல் நத்தையின் கூடுகளில் கோர்க்கப்பட்டிருந்த மணிகள் (beads) குறிப்பிடத் தகுந்தவை. அங்கு வசித்த மனிதர்கள், வண்ணங்களைக் கையாள்வதிலும் தேர்ச்சிபெற்றவர்களாக இருந்திருக்கின்றனர் என்று
நார்வே நாட்டைச் சேர்ந்த அகழாய்வாளர், கிரிஸ்டோபர் ஹென்ஷில் வுட்(Christopher Henshil-
wood) கூறுகிறார்.

பழங்கற்கால மனிதர்கள், வரைகலையை(art of drawing) அறிந்து, அவற்றைக் குறியீடுகளாகப்
பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதற்கு, லாம்போஸ் குகையில் (Blombos Cave) கிடைத்திருக்கும் 4 செ.மீ. நீளமுள்ள பாறைத்துண்டு(rock-flake) சான்றாகும். 4 செ.மீ. நீளம்கொண்ட அந்தப் பாறைத்துண்டின் மீது குறுக்கும் நெடுக்குமாக, செவ்வண்ணக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. அது, 73,000 ஆண்டுகள் பழமையானது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலையில், உலகின் மூத்த, மிகப் பழமையான குகை வரைகலை (Oldest Cave Art) அதுவாக மட்டுமே இருக்கிறது.

செவ்வண்ணக்கோடுகள், சிவப்பு ஓ-கர் வண்ணக் கோலால் (Red Ochre Crayon) வரையப்பட்டிருக்கலாம் என்று நார்வேயைச் சேர்ந்த கிரிஸ்டோபர் ஹென்ஷில் வுட் ( Christopher Henshilwood ) தலைமையிலான அகழாய்வுக்குழு, கருதுகின்றது.
இப்புதிய கண்டுபிடிப்பு 2018 செப்டம்பர் 12 ‘நேச்சர்’ இதழில் வெளிவந்திருக்கிறது.(Sep. 12, 2018, Nature). பாறைத்துண்டுமீது காணப்படும் சிவப்புக்கோடுகள், வண்ணம் தீட்டப்பட்டதா (Painting) அல்லது வரையப்பட்டதா (drawing) என்று ஆய்வு செய்யப்பட்டது. வண்ணம் தீட்டப்படவில்லை
என்றும், பாறைத்துண்டுமீது உள்ள வண்ணக்கோடுகள் சிவப்பு ‘ஓ-கர்’ வண்ணக் கோலால் (Red ochre cryon) வரையப்பட்டுள்ளன என்றும் ஆய்வு முடிவில் தெரியவந்தது.

இயற்கை வண்ணங்கள் இரு வகைப்படுகின்றன.
ஒன்று உயிரி-வண்ணம் (Orgonic pigment). இதுநீரில்

கரையக்கூடியது. மற்றது, கனிம-வண்ணம் (Inorgon-
icpigment). அது நீரில் கரையாதது. லாம்போஸ்

குகையில் கண்டெடுக்கப்பட்ட பாறைத்துண்டின்மீது, நீரில் கரையாத கனிம-வண்ணமான‘ ஓ-கர்’’ வண்ணக் கோலால்(Ochre Cryon) கோடுகள் வரையப்பட்டுள்ளன என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர் . ‘ஓ-கர்’(Ochre) என்பது இயற்கையில் கிடைக்கும் வண்ணத்தாது (Colour mineral). அதில் இரும்பு-ஆக்சைடு கலந்திருக்கும். மங்கிய மஞ்சள் , பழுப்பு, ஊதா, அடர்-சிவப்பு
(pale-yellow, brown, violet, deep-red) என்று பலவண்ணங்களில் அது கிடைக்கிறது. களியாகவும் (clay),
பொடியாகவும் (chalk) இரண்டு விதமாகக் கிடைக்கிறது. அவற்றில், களியாகக் கிடைக்கும் ‘ஓ-கர்’ தான், அடர்த்தியான வண்ணங்களுடன் காணப்படுகின்றது.

லாம்போஸ் குகையில் (Blombos Cave) கிடைத்திருக்கும் பாறைத் துண்டில், கோடுகள்
வரைவதற்குக் களிவடிவிலான ‘ஓ- க ர் ’ பயன்ப டுத்தப்பட்டிரு க்கின்றது. அப்படிப்
பயன்படுத்தப்பட்ட ‘ஓ-கர்’ வண்ணக்கோல்களின் முனைகள், 1 மிமீ முதல் 3 மி.மீ வரையில், மிகவும்
கூர்மையானதாக இருந்திருக்கின்றன! இதுவே கூட, 73,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களின்
தொழில்நுட்பத் திறமையைக் காட்டுகிறது எனலாம்.

லூகா பொலரோலோ (Luca Polarolo), ஜெனிவாப் பல்கலைக் கழகத்தில் (University ofGeneva, Switzerland),
மாந்தவியல் மற்றும் தென்-ஆப்பிரிக்கா தொடர்புடைய அகழாய்வுத் துறையில் பணிபுரியும்
தொழில்நுட்ப உதவியாளர். அவர், 2015-இல், தென் ஆப்பிரிக்கா வின் லாம்போஸ் குகையில் ஆய்வாளர்கள், ஒவ்வொரு மில்லிமீட்டராக, ஆய்ந்து அறிந்து, கொண்டுவந்து சேர்த்த வீழ்படிவு
மாதிரிகளை (sediment samples) சோதனைச் சாலையில் மிகவும் கவனமுடன், கழுவிக்கொண்டிருந்தார்.
அப்படிக் கழுவும் வேளையில்தான், அந்தப்பாறைத் துண்டை அடையாளம் கண்டார். அப்பாறைத்
துண்டு, சாம்பலாலும், தூசியாலும் (ash & dirt) மூடப்பட்டிருந்திருக்கிறது. ஒருமுறை கழுவிய
உ டனேயே , அந்த கல்லும், அதன் மீது வரையப்பட்டிருந்த செவ்வண்ணக் கோடுகளும்
துலங்கிவிட்டதாக லூகா பொலரொலோ பதிவு செய்கிறார்.

அது வரையிலும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை அவர் பார்த்திருப்பதாகவும்,
பல்வேறு வண்ணங்களையும் பார்த்திருப்பதாகவும், ஆனால் பாறைத்துண்டின்மீது சிவப்புக் கோடுகளை அதுவரையிலும் பார்த்ததில்லை என்றும் லூகா பொலரோலோ பதிவு செய்கிறார். அந்த கணத்தில், அந்த காட்சி நம்பமுடியாத வகையில், மிகவும் நெகிழ்ச்சியாக இருந்ததாகவும் அவர் உணர்ச்சிவசப்பட்டுக் கூறுகிறார்.

அப்பாறைத் துண்டில், ஒன்பது செவ்வண்ணக் கோடுகள் காணப்படுகின்றன. நெடுக்கில் வரையப்பட்ட 6 இணைகோடுகளின்மீது, சற்றே வளைந்த 3 இணைகோடுகள் குறுக்காக வரையப்பட்டுள்ளன. அவற்றின் தோற்றம், இன்றைய ஹேஷ்டேக் ( #, hashtag ) குறியீடுபோல காணப்படுவதாக, ஹென்ஷில்வுட் கூறுகிறார்.

அதாவது , 73,000 ஆண்டுகளுக்கு முன்பே , ஹோமோ-சேப்பியன்ஸ்’ (Homo-
Sapiens) ஹேஷ்டேக் குறியீட்டை, ஏதோ காரணம் கருதிப் பயன்படுத்தியிருக்கிறார்கள்
என்றும் சொல்லலாம்! என்ன காரணத்திற்காகப் பயன்படுத்தினார்கள் என்பது தான்
இன்றளவும் கேள்விக்குறியாக உள்ளது!

அந்தக்கோடுகள் , மனிதர்களால் உருவாக்கப்பட்டதா? அல்லது இயற்கையே உருவாக்கியதா? என்னும் ஐயமும் ஆய்வாளர்களுக்கு எழுந்தது. தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்தியதில், கோடுகள் அன்றைய மனிதர்களால் வரையப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுவிட்டது. மனித குலத்தில், குறியீடுகள்-செயல்பாடு (symbolic activity) முதன்முதல் தோன்றிய காலகட்டமாக, லாம்போஸ் குகை வரைகலை உருவான காலத்தை உறுதியாகச் சொல்லலாம் என்று இங்கிலாந்து நாட்டின் அகழாய்வாளர் ‘பால்பெடிட்’ (Paul Pettitt) கூறுகிறார்.

2011-இல் கிரிஸ்டோபர் ஹென்ஷில்வுட் (Christopher Henshilwood) தலைமையிலான அகழாய்வுக்குழு, வரைவதற்குத் தேவையான கருவிகளைக் கொண்ட ‘கருவிப்பெட்டி’ (tool-kit) ஒன்றையும் லாம்போஸ் குகையில் கண்டெடுத்திருக்கிறது. கருவிப் பெட்டியில் இருந்த கருவிகளைக்கொண்டு, ஆய்வாளர்கள் கோடுகளை மீளுருவாக்கம் செய்திருக்கின்றனர்.
ஆனால், அந்தக்கோடுகள் எதனை உணர்த்துவதற்காக வரையப்பட்டவை என்பது அவர்களுக்குப்
புரியவில்லை. அதற்கான காரணத்தை அறிய வேண்டிய தேவை உள்ளது. ஆனால் , அது
முற்றுப்பெறாத ஒன்றாகவும் நீடிக்கிறது என்றும் அவர்கள் சொல்கின்றனர்..

கிடைத்தி ரு க் கும் பாறைத் துண்டின் மீது வ ரையப்பட்டிருக்கும் சிவப்புக்கோடுகள் முற்றுப்பெறாமல், திடீரென நின்றுவிடுகின்றன. அது, அப்பாறைத்துண்டு முழுமையானது அல்ல
என்றும், தேய்க்கப்பட்ட மற்றொரு பெரிய பாறையிலிருந்து (grind-stone) உடைந்திருக்கக் கூடும்
என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அந்த முழுப்பாறை எந்த அளவு பெரியதாக இருந்திருக்கும்
என்று கணிக்க முடியவில்லை என்றும் கூறுகின்றனர். ஆனாலும், பாறைத்துண்டின்மீது காணப்படும் வண்ணக் கோடுகள், முழுப்பாறையின் மீதும் படர்ந்திருக்க வேண்டும் என்று சொல்லலாம் என்கின்றனர்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அகழாய்வாளர் ஃப்ரான்சிஸ் கோடி எரிக்கோ (Fracesco d’ Errico),
பாறைத்துண்டின் மீது வரையப்பட்டிருக்கும் கோடுகள், அதற்கு முன்பாகவே லாம்போஸ்
குகையில் கண்டெடுக்கப்பட்டப் பொருட்கள்மீது வரையப்பட்டிருக்கும் உருவங்களை ஒத்திருப்பதாகக் கூறுகிறார். இயற்கையில் கிடைக்கும் கனிம வண்ணங்களைக் கொண்டு (mineral pigment) வரையப்பட்ட ‘கற்காலத்து வரைகலை’ (Stone-age Art) என்பதை இப் புதிய கண்டுபிடிப்புத்
தெள்ளத்தெளிவாக உணர்த்துவதாக, இங்கிலாந்தைச் சேர்ந்த அகழாய்வாளர் ஏலிஸ்டர் பைக் (Alistair Pike) கூறுகிறார்.

65,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நியாண்டர்தால் மனிதர்கள், ஸ்பெயின் நாட்டின்
குகைச் சுவர்களில் தீட்டியிருந்த வரைகலை ஓவியங்கள், தென்னாப்பிரிக்காவின், லாம்போஸ்
குகைகளில் காணப்படும் ஓவியங்கள்போன்று சிறப்பானவை என்று பைட் மற்றும் பெடிட்(Pite&
Pettitt) கூறுகின்றனர். பழங்கற்கால மனிதர்களும் (Homo-Sapiens), நியாண்டர்தால் மனிதர்களும் (Neonderthal People) ஏறத்தாழ சமகாலத்தில், வரைகலை ஓவியங்களைத் துவங்கிவிட்டதாகக் கனடாவைச் சேர்ந்த ஏப்ரில் நோவல் (April Nowell) கூறுகிறார்.
இரண்டு மனித இனங்களுமே, இப்படிப்பட்ட வரைகலைகள் வழியே தகவல்தொடர்புக்கு
முயன்றிருக்கிறார்கள் என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்தோனேஷியாவின், சுலவேசி (Sulawesi islands) தீவுகளில், சுண்ணாம்புப் பாறையாலான குகைகளில் காணப்பட்ட வரைகோடுகள், 40,000 ஆண்டுகள் பழமையானவை என்று யுரேனியம்-தோரியம் வயதறிதல் (Urenium-Thorium Dating) முறையில் கணக்கிடப்பட்டது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த அகழாய்வாளர், ‘ராம்’ (Brumm) மற்றும் அவரது ஆய்வுக் குழுவினர், அதே யுரேனியம்-தோரியம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திடலாம் போஸ் குகையில் கிடைத்திருக்கும் பாறைத்துண்டின் வரைகோடுகளின் வயதை, 73 ஆயிரம் ஆண்டுகள் என்று கணித்திருக்கின்றனர். அதற்காக, அத்துண்டின் ஒருபகுதி மீது படிந்திருந்த தாதுவைப் (mineral formation) பயன்படுத்தியிருக்கின்றனர். பாறையில் கோடுகள் வரையப்பட்டதற்குப் பின்பான
கால ங்களில், பாறைத் துண்டின்மீது தாது படிந்திருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

ஒரு கைவிரல் அளவே ஆன துண்டுக் கல்லைக் கூடக் கவனமாகக் கண்டெடுத்து, அதனைக்
கொண்டுவந்து, அதன்மீது வரையப்பட்டகோடுகளின் வயதையும், அதனை உருவாக்கிய பழங்கற்கால மனிதர்களையும், அவர்களது வரைகலை பற்றிய அறிவையும், அதன் நோக்கம் பற்றியும் தெளிவாகவும், நுணுக்கமாகவும் ஆய்வு செய்து , வெளிப்படுத்தியுள்ளனர், மேலை நாட்டார்.
ஆனால், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களோடு வாழ்ந்து வந்த நம்தமிழ்
முன்னோர், கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் விட்டுச்சென்றிருக்கும் பொருட்களைப்
பொருட்படுத்தாமல் இருக்கும் அரசுகளின் பொறுப்பற்றப் போக்கு மிகுந்த மனவலியைத்
தருகிறது.

Facebook
Pinterest
LinkedIn
Twitter
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top

Subscribe To Our Newsletter

Subscribe to our email newsletter today to receive updates on the latest news, tutorials and special offers!