தோழர் தொ. ப.

காட்சி -1 இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரியில் 1972 முதல் கற்பித்தல் பணி. 1965 -இன் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் மதுரை மாணவப் போராளியும், நண்பருமான புலவர் வீராசாமி என்ற மறவர்கோஇளையான்குடி உயர்நிலைப்பள்ளியில்தமிழாசிரியர்.தொ. ப. வும் வீராசாமியும் அறைநண்பர்கள். இரு ஆண்டுகளின் பின் தொ. ப. வுக்குத் திருமணம். பரமக்குடியில் தனியாக வீடு எடுத்து இல்லறம்.இளையான்குடி போய்ப்போய் வந்தார். ஆண்டு நினைவு இல்லை; தொ. ப. பரமக்குடியில் வீடெடுத்து தங்கியிருந்த காலம்; பணியின் பொருட்டு இளையான்குடி போய்த் திரும்பினார். பரமக்குடியில்மேல்மாடி வீடு. இரவு உணவுக்குப்பின் ஒருநாள் அவருடன் உரையாடல். பேசிக் கொண்டிருந்த வேளையில், புரட்சிகர மார்க்சிய லெனினியப் பாதையில் ...

Read More

நண்பரும் தோழருமான தொ. ப.

தொ. ப. அவர்களுடனான நட்பு ’அறியப்படாத தமிழக’த்துடன் தொடங்கியது. அவர் பெரியாரிஸ்ட் என்றுதான் நண்பர்கள்அறிமுகம் செய்து வைத்தார்கள் . அவரும் அப்படித்தான் சொன்னார். வீட்டில் பெரியாருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் சுவரில் இருந்தது. ஆனால் அவருடைய சின்னச் சின்னக் கட்டுரைகளை வாசிக்க வாசிக்க அவையெல்லாம்மார்க்சிய அணுகுமுறையுடன் எழுதப்பட்டிருப்பதைச் சட்டெனப் புரிந்து கொள்ள முடிந்தது. ( பெரியாருடைய அணுமுறையிலும்தான்மார்க்சியப்பார்வை இல்லையா என்ன?)அந்த நிமிடத்தில் துளிர்த்த நட்புணர்வும் தோழமையும் அவர் இறக்கும்நாள் வரை நீடித்தது. தேசிய இனப்பிரச்னையில் இலங்கைத்தமிழர் பிரச்னையில்சாதி-வர்க்க முன்னுரிமைகளில் என மூன்று புள்ளிகளில் வேறுபட்டு நின்றோம். அதற்காக என்னுடனான உறவை அவர் முறித்ததில்லை. முகம் சுளித்ததில்லை. அதைத்தாண்டிய எங்கள் ...

Read More

தனித்துவம் மிக்க ஒரு தமிழறிஞர்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டைநகரில் ஓர் எளிய குடும்பத்தில் 1950 ஆம் ஆண்டு பிறந்ததொ. பரமசிவன் 2020 ஆம் ஆண்டு இறுதியில், டிசம்பர்24 ஆம் நாள் தனது 70 ஆவது வயதில் மறைந்தார்.இன்றைய தமிழகத்தின் தனித்துவம் மிக்கத் தமிழறிஞர்என்று அடையாளப்படுத்தப்படும் பேராசிரியர் தொ.பரமசிவன் அவரது மாணவர்களாலும் நண்பர்களாலும்“தொ.ப” என்று அன்போடு அழைக்கப்படுகின்றார்.இளையான்குடி சாகீர் உசேன் கல்லூரியிலும் மதுரைதியாகராயர் கல்லூரியிலும், பின்னர் திருநெல்வேலிமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும்தமிழ்த் துறைகளில்பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும்பணிபுரிந்தவர் பேராசிரியர் தொ.ப.“மாணவர்களுக்கான பேராசிரியர் ” என்றுவழங்கப்பட்டவர். கல்லூரிப் பணி முடிந்த பிறகும் மாலைநேரங்களில், பின்னிரவு வரை மாணவர்களோடும்நண்பர்களோடும் தமிழ் வரலாறு, இலக்கியம், பண்பாடுகுறித்து தொடர்ந்த உரையாடல்களை நடத்திச் சென்றவர்.எழுத்து, பேச்சு இரண்டில்பேச்சைதனது ...

Read More

எது சரியான மொழிக் கொள்கை?

பொதுவாக மொழிக் கொள்கை என்றுசொல்லும் போது நாம் என்ன புரிந்து கொள்கிறோம்?நான் பார்த்தவரையில் பலபேர் மொழிக்கொள்கைஎன்பது ஒரு மொழியைப் படிப்பதற்கான வாய்ப்புஎன்று கருதுகிறார்கள். அல்லது பள்ளியில் ,கல்லூரியில் என்ன மொழி படிக்க வேண்டும்என்னும் விசயத்தைத்தான் நாம் மொழிக்கொள்கைஎன்று கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம். இது,மொழிக் கொள்கையின் பல கூறுகளில் ஒன்றுதான்.மொழிக் கொள்கை என்பது அது மட்டும் கிடையாது.ஒரு நாட்டினுடைய ஆட்சி அதிகாரம் அதன்கூறுகளாக இருக்கக்கூடிய பாராளுமன்றம் ,நீதிமன்றம், நிர்வாகத்துறை, வெளியே இருக்ககூடியபொருளாதாரம், வர்த்தகம், தொழில்துறை,நம்முடைய வாழ்வினுடைய ஒவ்வொரு இடத்திலும்எங்கெல்லாம் மொழியை நாம் பயன்படுத்துகிறோமோஎல்லா இடங்களிலும் நமக்குரிய அங்கீகாரம்எல்லாம் சேர்ந்ததுதான் மொழிக்கொள்கை.ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் இந்தி படிக்கும்வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் ஒரு ...

Read More

மீண்டு(ம்) வருவேன்..

கீழ்த்தளத்தில் இரண்டு, முதல் தளத்தில் மூன்றுபடுக்கை அறைகள், இதுதவிர பல அறைகள் கொண்ட7000 சதுர அடியில் விஸ்தாரமாக ராஜாஅண்ணாமலைபுரத்தில் பங்களாவில் வாழ்ந்து வந்தஎனக்கு 150 சதுர அடியிலிருந்த இந்த அறை தற்சமயம்மிகவும் பெரிதாக இருந்தது. நான் பிழைத்தெழுந்துமீண்டும் வாழப் போகிறேனா என்பதைத் தீர்மானிக்கப்போகின்ற இடம். இங்கு வந்து இன்றோடு நான்கு நாட்கள்ஆகிவிட்டது. வேளாவேளைக்கு சுடுசோறும் குடிப்பதற்குப்பழச்சாறுகளும் கிடைக்கின்றன. மனித முகங்களைத் தொடர்ந்து நான்கு நாட்கள்பார்க்காமல் இருப்பது இதுதான் என் வாழ்க்கையில் முதல்முறை. அவ்வப்போது முழு உடலையும் மறைக்கும்வகையில் ஒருவர் வருகிறார். விண்வெளி வீரரைப் போலக்காட்சி அளித்தார். தொளதொளவென்று தொங்கும் பிபிஈஉடையினால் உடல் அமைப்பைப் பற்றித் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை. கண்கள், குறிப்பாய் ...

Read More

வேளாண் வாயில் வேட்பக் கூறுதல்

பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பிற்கால வாசகர்களுக்கு எளிதாகவும் முழுமையாகவும் அறிமுகப்படுத்திய பெருமைஉரையாசிரியர்களையே சாரும் . கி.மு இரண்டாம்நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டு வரை ஏட்டுச் சுவடிகளிலேயே வாழ்ந்து வந்த இலக்கியங்களுக்கு மாணவர்களின்நினைவாற்றலில் இடத்தைப் பெற்றுத் தந்த உரையாசிரியர்களுள் நச்சினார்க்கினியர் மிக முக்கியமானவர். நச்சினார்க்கினியர் 14ஆம் நுற்றாண்டில் தோன்றியவர். அதிக எண்ணிக்கையில் நூல்களுக்கு உரை வரைந்தவர் என்ற பெருமைக்குரியவர். மதிநுட்பமும் கூர்த்த பார்வையும் உடையவர்.தமது பரந்துபட்ட இலக்கிய அறிவினால் மூலநூல்களுக்குப் புதுப்புதுக் கோணங்களில் உரை விளக்கம் கூறியவர். பிற்காலப் புலவர்களால் பெரிதும் போற்றப்பட்டவர் . இவரைப் பற்றி ,“தம் காலத்தை ஒட்டிய கருத்துக்களை மட்டுமல்லாமல் தாம் சார்ந்த சமய , சமூகக் ...

Read More

தெற்காசிய பொருளாதாரக் கூட்டமைப்பு

தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் (ASEAN -Association of Southeast Asian Nations) முன்னெடுப்பில் ‘பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டமைப்புக்கான’ (RCEP - Regional Comprehensive Economic Partnership) ஒப்பந்தம் நவம்பர் மாதம் 15 ஆம் நாள் உறுப்பு நாடுகளால் வெற்றிகரமாகக் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதில் 10தெற்காசிய நாடுகளும்- ப்ரூனைய், கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், வியட்நாம்- ஆகிய இந்நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துள்ள ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.இந்த RCEP ஒப்பந்தம் இதுவரை உலகம் கண்டிராத மீப்பெரும் பிராந்தியரீதியான வர்த்தக ஏற்பாடு. இந்த ஒப்பந்தத்திற்கானப் பேச்சு வார்த்தை ...

Read More

நீலப் புரட்சி

காடுகளிலும், மலைப் பகுதிகளிலும் தொன்று தொட்டு வாழும் மக்களே பழங்குடிகள் என்ற பொதுப் புரிதல் இங்கு இருக்கிறது. அது தவறு. தங்கள் வாழிடமும், தொழிலும், பண்பாடும், கலாச்சாரமும் மாறாமல் இன்றும் கடலோரங்களில் வாழும் மக்களும் பழங்குடிகளே. கடந்த காலத்தில், மத்திய அரசால் அமைக்கப்பட்டு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்ட மண்டல் கமிஷனும் இதையே உறுதி செய்தது. பழமையான தனித்துவப் பண்புகளோடு, பூகோள ரீதியாய் தனித்துவப்பட்டு, பிற சமவெளிச் சமூகங்களோடு தொடர்பு வைத்துக்கொள்வதில் தயக்கம் காட்டும் மக்களே பழங்குடிகள்.காலங்காலமாக கடலில் வேட்டைத் தொழிலும், பாசி விவசாயமும் செய்யும் மீனவர்கள், சுயமரியாதை மிக்கவர்கள். தொழிலில் அவர்களிடம் கூலி என்பதே இல்லை. பழங்குடியினரின்தனித்துவமான ...

Read More

தேன் தடவிய சொற்களோடு வந்திருக்கிறது புதிய கல்விக் கொள்கை

தேன் தடவிய சொற்களோடு வந்திருக்கிறது புதிய கல்விக் கொள்கை. கொஞ்சம் கவனம் பிசகிய நிலையில் வாசிப்பவர்களை சாய்த்துவிடக்கூடிய அளவில் வசீகரமான வார்த்தை வலையாக அதை தயாரித்து வீசியிருக்கிறார்கள்.கவனமாக வாசித்த தமிழகம் அதன் சூதினை உள்வாங்கி அதற்கு எதிர்வினையாற்றத் தொடங்கி இருக்கிறது. தமிழகம் இதற்கு எதிர்வினையாற்றும் என்றும் எதிர்பார்த்தே இருந்தது மத்திய அரசு. ஆனால் இங்கு கிளம்பியுள்ள கொதிநிலையின் உச்சநிலை அவர்களைக் கொஞ்சம் அசைக்கவே செய்திருக்கிறது.எல்லோரும் ஏற்கிறார்கள். ஏன் தமிழகம் மட்டும் இந்தக் கொள்கையை இப்படி முரட்டுத்தனமாக எதிர்க்கிறது என் று முனகத் தொடங்கி இருக்கிறார்கள்.இதற்கான காரணம் எளிதானது.“கல்வி சிறந்த தமிழ்நாடு” என்றான் பாரதி.“பசியோடு இருக்கிற ஒரு மாட்டினை அவிழ்த்து விட்டிருக்கிறீர்கள். ...

Read More

உழைப்பு எனும் மார்க்சின் மந்திரச் சொல்

“ஃபாயர்பாஹ் பற்றிய ஆய்வுரைகளில் (1845)” மார்க்சியக் கோட்பாட்டின் முதல் வரைவு மிகச் சுருக்கமாக வழங்கப்பட்டிருப்பதாக மார்க்சிய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆய்வு முடிவுகளைச் சுருக்கமான “முடிவுரை”யில் சில பக்கங்களில் எழுதித் தந்து விட்டு, ஆய்வின் முழுவடிவை இனிதான் எழுத வேண்டும் என்ற நிலையில் மார்க்ஸ் நின்று கொண்டிருக்கிறார். மார்க்சியம் அவரது ஆயுள் முழுவதும் நமக்காக விரிவாக எழுதப்படுகிறது. ஃபாயர்பாஹ் பற்றிய ஆய்வுரைகளின் முதல் ஆய்வுரையின் முதல் வாக்கியம் கீழ்க்கண்டவாறு அமைகிறது. “ஃபாயர்பாஹின் பொருள்முதல்வாதம் உள்ளிட்டு இதுவரை இருந்து வந்திருக்கும் எல்லாப் பொருள்முதல்வாதத்துக்கும் உரிய பிரதான குறைபாடு இதுதான்: பொருள் , எதார்த்தம், புலனுணர்வு என்பது புறப்பொருள் அல்லது சிந்தனை என்னும் வடிவத்தில் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது; ஆனால் மனிதப் புலனுணர்வுள்ள நடவடிக்கை என்றும் நடைமுறை என்றும் கொள்ளப்படவில்லை, அகநிலையாகக் கொள்ளப்படவில்லை.” (கா. மார்க்ஸ் பி. எங்கெல்ஸ் வி. இ. லெனின் இயக்கவியல் பொருள்முதல்வாதம், முன்னேற்றப் பதிப்பகம் ...

Read More